Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மட்டக்களப்பு கோட்டைமுனையில் நிரந்தர தபால் நிலைய நிர்மாண பணிகள் கந்தசாமி பிரபு MP தலைமையில் இன்று ஆரம்பிப்பு


மட்டக்களப்பு கோட்டைமுனையில் நிரந்தர தபால் நிலைய நிர்மாண பணிகள் கந்தசாமி பிரபு MP தலைமையில் இன்று 11/11/2026 ஆரம்பிப்பு.  

மட்டக்களப்பு மாவட்டத்தின்  கோட்டைமுனை பிரதேசத்தில் தற்காலிகமாக வாடகை கட்டடத்தில் செயற்படும் தபாலகத்திற்கு நிரந்தரமாக புதிய கட்டடத்தை அமைப்பதற்கான அடிக்கல் நடும் வைபவம் இன்றைய தினம் தபால் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்றது. 

பிரதேச மக்களின் நன்மை கருதி  நீண்ட கால நிரந்தர கட்டட தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் 24 மில்லியன் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் இக்கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கந்தசாமி பிரபு அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன் 

மட்டு மாநகரசபை மேயர் பிரதி மேயர் முதல்வர், பிரதி முதல்வர் மற்றும் மாநகரசபை கௌரவ உறுப்பினர்கள் , தபால் திணைக்கள அதிகாரிகள்  உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும்  கலந்து சிறப்பித்தனர்.


மட்டக்களப்பு கோட்டைமுனையில் நிரந்தர தபால் நிலைய நிர்மாண பணிகள் கந்தசாமி பிரபு MP தலைமையில் இன்று ஆரம்பிப்பு Reviewed by www.lankanvoice.lk on நவம்பர் 11, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.