සිංහල පරිවර්තනය සමග) சர்வதேச நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் NPP அரசு!
அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் சர்வதேச பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியிலும் எரிபொருள் விலைக் குறைப்பு மற்றும் மானியங்கள் மூலம் மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்க முயன்று வருகிறது.
ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்காலத்துடன் ஒப்பிடும்போது, தற்போதைய உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக அதிகரித்துள்ளதை வெறும் உள்நாட்டுச் சில்லறை விலைகளைக் கொண்டு மட்டும் மதிப்பிட முடியாது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதிலிருந்து, சர்வதேச பொருளாதாரச் சவால்களுக்கு மத்தியிலும் மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைத்து, நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பான பாதையில் கொண்டு செல்வதற்கான பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.
குறிப்பாக, அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துவதும், எரிபொருள் உள்ளிட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் நேரடியாகத் தொடர்புபட்ட பொருட்களின் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதும் அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புகளாக இருந்து வருகின்றன.
இன்றைய உலகப் பொருளாதாரச் சூழலைப் பொறுத்தவரையில் எந்தவொரு நாடும் சர்வதேச நெருக்கடிகளிலிருந்து முற்றாகத் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ள முடியாது. குறிப்பாக, மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் மற்றும் இராணுவப் பதற்றங்கள், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், இறக்குமதிச் செலவுகள் போன்றவை இலங்கை போன்ற இறக்குமதியைச் சார்ந்த நாடுகளின் பொருளாதாரத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இவ்வாறான சவால்களுக்கு மத்தியில், சர்வதேச விலையேற்றத்தின் முழுச் சுமையையும் நுகர்வோர் மீது சுமத்தாமல், மக்களைப் பாதுகாக்கும் வகையில் விலை முகாமைத்துவ நடவடிக்கைகளை முன்னெடுப்பது எந்தவொரு பொறுப்புள்ள அரசாங்கத்தினதும் கடமையாகும். அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளையே தற்போதைய NPP அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
தற்போது ஒக்டேன் 92 பெற்றோல் ஒரு லீற்றர் 424 ரூபாவாகவும், ஓட்டோ டீசல் ஒரு லீற்றர் 397 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது. இந்த விலைகளைத் தனித்துப் பார்த்து அரசாங்கத்தின் பொருளாதாரச் செயற்பாடுகளை மதிப்பிடுவது சரியான அணுகுமுறையாக இருக்க முடியாது.
ஏனெனில், எரிபொருள் விலை என்பது உள்நாட்டு அரசியல் தீர்மானங்களால் மாத்திரம் நிர்ணயிக்கப்படுவதில்லை. உலகச் சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதிச் செலவு, வரிகள், மானியங்கள் மற்றும் அரசாங்கத்தின் விலை நிர்ணயக் கொள்கை எனப் பல்வேறு காரணிகள் ஒன்றிணைந்தே அதன் இறுதி விலையைத் தீர்மானிக்கின்றன.
ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலமான 2023 முதல் 2024 ஆம் ஆண்டின் மத்திய பகுதி வரையிலான காலப்பகுதியில் உலகச் சந்தையில் ஒரு பரல் கச்சா எண்ணெயின் விலை சராசரியாக 70 முதல் 85 அமெரிக்க டொலர் வரையான மட்டங்களில் காணப்பட்டது.
ஆனால், தற்போதைய அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், குறிப்பாக 2026 இறுதிப் பகுதியில், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்கள் உள்ளிட்ட சர்வதேசக் காரணங்களால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக அதிகரித்து 90 முதல் 105 அமெரிக்க டொலர்களையும் தாண்டியுள்ளது.
இந்த இரண்டு காலப்பகுதிகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அன்றைய சர்வதேசச் சந்தை நிலவரத்திற்கும் இன்றைய சர்வதேசச் சந்தை நிலவரத்திற்கும் இடையில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இருப்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் உள்நாட்டில் ஒரு லீற்றர் ஒக்டேன் 92 பெற்றோலின் விலை 340 முதல் 370 ரூபா வரையிலும், ஓட்டோ டீசலின் விலை 310 முதல் 360 ரூபா வரையிலும் காணப்பட்டது. ஆனால், தற்போதைய சர்வதேசச் சந்தை விலையேற்றத்திற்குப் பின்னணியில், பெற்றோல் 424 ரூபாவாகவும், ஓட்டோ டீசல் 397 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
இங்கே முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில், இரண்டு ஆட்சிக்காலங்களிலும் நிலவிய சர்வதேசக் கச்சா எண்ணெய் விலைகளைப் புறக்கணித்துவிட்டு, உள்நாட்டின் சில்லறை விலைகளை மாத்திரம் ஒப்பிட்டுப் பார்ப்பது பொருளாதார ரீதியாக முழுமையான மதிப்பீடாக அமையாது என்பதாகும்.
சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலை குறைவாக இருந்த காலத்தையும், உலகளாவிய நெருக்கடிகளால் விலை உயர்ந்துள்ள காலத்தையும் ஒரே அளவுகோலில் வைத்து அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிப்பது எந்த வகையிலும் நியாயமானதல்ல.
இதனைவிட முக்கியமான விடயம், தற்போதைய அரசாங்கம் எரிபொருளைச் செலவு மீட்பு அடிப்படையிலான விலை நிர்ணயச் சூத்திரத்தின் (Cost-Recovery Formula) கீழ் கணக்கிடப்படும் முழுமையான விலையில் மக்களுக்கு வழங்கவில்லை என்பதாகும்.
தற்போதைய விலை நிர்ணயச் சூத்திரத்தின்படி, ஒக்டேன் 92 பெற்றோல் ஒரு லீற்றரின் உண்மையான விலை 481 ரூபாவாக இருக்க வேண்டிய நிலையில், அரசாங்கம் அதனை 424 ரூபாவுக்கே விற்பனை செய்து வருகின்றது. இதன் மூலம் ஒரு லீற்றருக்கு 57 ரூபா வித்தியாசத்தை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு, நுகர்வோருக்கு விலை நிவாரணம் வழங்குகின்றது.
இது வெறுமனே எண்களின் அடிப்படையிலான கணக்கீடு மாத்திரமல்ல. உலகப் பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்படும் சாதாரண மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதற்காக அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் பொருளாதாரப் பொறுப்பின் வெளிப்பாடாகும்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளின் எரிபொருள் விலைகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் எரிபொருள் விலைகள் குறைவாக இருப்பதையும் இந்தப் பின்னணியில் கவனிக்க வேண்டும்.
சர்வதேச விலையேற்றத்தின் முழுமையான தாக்கத்தை மக்களிடம் சுமத்தாமல், விலைச் சீராக்க நடவடிக்கைகள் மற்றும் மானியங்கள் ஊடாக நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளைப் புறக்கணித்துவிட்டு விமர்சனங்களை முன்வைப்பது பொறுப்பான அரசியல் அணுகுமுறையாக இருக்க முடியாது.
எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை விமர்சிப்பதற்கு முழுமையான ஜனநாயக உரிமை இருக்கின்றது. ஆனால், அந்த விமர்சனங்கள் பொருளாதார உண்மைகளையும் சர்வதேசச் சந்தை நிலவரங்களையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.
குறிப்பாக, பொருளாதாரத் துறை தொடர்பான புரிதலும் அனுபவமும் கொண்ட ஹர்ஷ டி சில்வா போன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சர்வதேச எண்ணெய் விலைகளுக்கும் உள்நாட்டு எரிபொருள் விலை நிர்ணயத்திற்கும் இடையிலான தொடர்பை நன்கு அறிந்திருக்கின்றார்கள்.
இருப்பினும், ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்துடன் ஒப்பிட்டு, தற்போதைய அரசாங்கம் பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை அதிகரித்து மக்களின் வாழ்க்கைச் சுமையை உயர்த்தியுள்ளதாக மாத்திரம் பிரசாரம் செய்வது, முழுமையான பொருளாதாரப் பின்னணியை மக்களிடமிருந்து மறைக்கும் அணுகுமுறையாகவே பார்க்கப்படுகின்றது.
ஒரு லீற்றர் எரிபொருளின் விலையை மட்டும் முன்வைத்து அரசாங்கத்தின் பொருளாதாரச் செயற்பாடுகளைத் தீர்மானிக்க முடியாது. உலகச் சந்தையில் எண்ணெய் விலை எவ்வளவு இருந்தது? இறக்குமதிக்காக நாடு எவ்வளவு செலவிட வேண்டியுள்ளது? அரசாங்கம் எவ்வளவு மானியத்தை ஏற்றுக்கொள்கின்றது? மக்களிடம் முழுச் செலவும் அறவிடப்படுகின்றதா? போன்ற கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும்.
மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு அரசாங்கத்திற்கு எதிரான அதிருப்தியை உருவாக்குவது எளிதான அரசியல் தந்திரமாக இருக்கலாம். ஆனால், அதனால் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கப்போவதில்லை. உண்மைகளை மறைத்து முன்வைக்கப்படும் விமர்சனங்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குப் பதிலாக அவர்களைத் தவறாக வழி நடத்துவதற்கே வழிவகுக்கும்.
இன்று இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதாரச் சவால்கள் ஒரே நாளில் உருவானவையல்ல. நீண்டகால பொருளாதாரப் பலவீனங்களும், சர்வதேச நெருக்கடிகளும் ஒன்றிணைந்தே நாட்டின் தற்போதைய நிலைமையை உருவாக்கியுள்ளன. இவற்றிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு நிலையான பொருளாதாரக் கொள்கையும், பொறுப்பான அரச நிர்வாகமும், மக்களின் நலன்களை முதன்மைப்படுத்தும் அரசியல் அணுகுமுறையும் அவசியமாகின்றன.
மக்கள் இன்று எதிர்பார்ப்பது வெறுமனே அரசாங்கத்தைக் குறை கூறும் அரசியலையல்ல. மாறாக, நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாத்து, வாழ்க்கைச் செலவைக் குறைத்து, இளைய தலைமுறைக்கு நம்பிக்கையான எதிர்காலத்தை உருவாக்கி, வளமானதொரு இலங்கையைக் கட்டியெழுப்பும் பொறுப்பான அரசியலையே.
அரசாங்கத்தின் மீது விமர்சனங்களை முன்வைப்பது எதிர்க்கட்சியின் ஜனநாயகக் கடமைதான். ஆனால், அரசியல் இலாபத்திற்காக சர்வதேச நெருக்கடிகளையும் பொருளாதாரச் சவால்களையும் திரிபுபடுத்தி மக்களிடம் அச்சத்தையும் அதிருப்தியையும் உருவாக்குவது ஆரோக்கியமான ஜனநாயக அரசியலுக்கு வலுச்சேர்க்காது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீதான மக்களின் எதிர்பார்ப்புகளும் பொறுப்புகளும் மிகப் பெரியவை. அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கான அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்கள் நலனின் அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும். அரசாங்கம் தவறு செய்தால் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும்; அதேவேளை, சர்வதேச நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களையும் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகளையும் நியாயமாக அங்கீகரிக்க வேண்டும்.
ஏனெனில், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது என்பது ஒரு கட்சியின் வெற்றி மாத்திரமல்ல; அது ஒட்டுமொத்த மக்களின் எதிர்காலத்துடனும் தொடர்புபட்ட தேசியப் பொறுப்பாகும்.
வெறும் அரசியல் விமர்சனங்களால் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியாது. உண்மைகளை அடிப்படையாகக் கொண்ட விவாதங்களும், பொறுப்பான அரசியல் பங்களிப்புகளும், மக்களின் நலன்களை முன்னிறுத்தும் தீர்மானங்களுமே நாட்டை முன்னோக்கி நகர்த்தும்.
எனவே, எரிபொருள் விலையை மாத்திரம் முன்னிறுத்தி அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் பிரசாரம் செய்வதற்குப் பதிலாக, சர்வதேசச் சந்தையின் உண்மை நிலவரத்தையும் அரசாங்கம் மக்களுக்காக ஏற்றுக்கொள்ளும் பொருளாதாரப் பொறுப்பையும் எதிர்க்கட்சிகள் நேர்மையாக மதிப்பிட வேண்டும். மக்களின் ஆணை மாற்றத்திற்கானது; அந்த மாற்றத்தைப் பாதுகாப்பதும், நாட்டை வளமான எதிர்காலத்தை நோக்கி வழிநடத்துவதும் அனைவரினதும் பொறுப்பாகும்!
அஹமட் இர்ஷாட்.
இன்றைய தினகரன்
10-11-2026
ජාත්යන්තර අර්බුද මැද NPP රජය ජනතාවට සහන සලසනවා!
අනුර කුමාර දිසානායක මහතා ප්රමුඛ රජය ජාත්යන්තර ආර්ථික අභියෝග මධ්යයේ ඉන්ධන මිල අඩු කිරීම සහ සහනාධාර හරහා ජනතාවගේ ජීවන බර ලිහිල් කිරීමට උත්සාහ කරයි.
රනිල් වික්රමසිංහගේ පාලන සමය හා සසඳන විට වත්මන් ගෝලීය වෙළඳපොලේ බොරතෙල් මිල සැලකිය යුතු ලෙස ඉහළ යාම දේශීය සිල්ලර මිලෙන් පමණක් මැනිය නොහැක.
+++++++++++++++++
ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා ප්රමුඛ ජාතික ජනතා ශක්ති රජය රට භාරගත් දා සිට ජාත්යන්තර ආර්ථික අභියෝග මධ්යයේ වුවද ජනතාවගේ බර ලිහිල් කර රටේ ආර්ථිකය සුරක්ෂිත මාවතකට ගෙන ඒම සඳහා නොකඩවා විවිධ ක්රියාමාර්ග ගනිමින් සිටී.
විශේෂයෙන්ම අත්යාවශ්ය භාණ්ඩ මිල පාලනය කිරීම සහ ඉන්ධන ඇතුළු ජනතාවගේ දෛනික ජීවිතයට සෘජුව සම්බන්ධ භාණ්ඩ මිල ඉහළ යාමේ බලපෑම අවම කිරීම රජයේ ප්රධාන වගකීම් වී තිබේ.
අද පවතින ගෝලීය ආර්ථික වාතාවරණය අනුව කිසිම රටකට ජාත්යන්තර අර්බුදවලින් සම්පූර්ණයෙන්ම හුදෙකලා විය නොහැක. විශේෂයෙන්ම මැදපෙරදිග දේශපාලන හා යුදමය ආතතීන්, ලෝක වෙළෙඳපොළේ බොරතෙල් මිලෙහි උච්චාවචනයන්, ආනයන වියදම් ආදිය ශ්රී ලංකාව වැනි ආනයන මත යැපෙන රටවල ආර්ථිකයට සෘජු බලපෑමක් ඇති කරයි.
මෙවන් අභියෝග මධ්යයේ ජාත්යන්තර මිල ඉහළ යාමේ සම්පූර්ණ බර පාරිභෝගිකයන් මත පටවන්නේ නැතිව මහජනතාව ආරක්ෂා කිරීම සඳහා මිල කළමණාකරණ ක්රියාමාර්ග ක්රියාත්මක කිරීම වගකිවයුතු ඕනෑම රජයක යුතුකමකි. එම වගකීම ඉටු කිරීමට වත්මන් එන්පීපී රජය උත්සාහ ගනිමින් සිටී.
මේ වනවිට ඔක්ටේන් 92 පෙට්රල් ලීටරයක් රුපියල් 424 කට සහ ඔටෝ ඩීසල් ලීටරයක් රුපියල් 397 කට අලෙවි කෙරේ. මෙම මිල ගණන් දෙස පමණක් බලා රජයේ ආර්ථික ක්රියාකාරිත්වය විනිශ්චය කිරීම නිවැරදි ප්රවේශයක් විය නොහැක.
මන්ද ඉන්ධන මිල තීරණය වන්නේ දේශීය දේශපාලන තීන්දු මත පමණක් නොවන බැවිනි. ලෝක වෙළෙඳපොළේ බොරතෙල් මිල, ආනයන පිරිවැය, බදු, සහනාධාර සහ රජයේ මිල නියම කිරීමේ ප්රතිපත්තිය වැනි විවිධ සාධක එහි අවසාන මිල තීරණය කරයි.
2023 වසරේ සිට 2024 මැද භාගය දක්වා රනිල් වික්රමසිංහ මහතාගේ පාලන කාලය තුළ ගෝලීය වෙළෙඳපොළේ බොරතෙල් බැරලයක මිල ඇමෙරිකානු ඩොලර් 70 ත් 85 ත් අතර සාමාන්ය මට්ටමක දක්නට ලැබුණි.
කෙසේ වෙතත්, අනුර කුමාර දිසානායක ප්රමුඛ වත්මන් රජයේ පාලන සමයේදී විශේෂයෙන්ම 2026 වසරේ අග භාගයේදී මැදපෙරදිග ආතතීන් ඇතුළු ජාත්යන්තර හේතූන් මත ලෝක වෙළඳපොලේ බොරතෙල් මිල සැලකිය යුතු ලෙස ඉහළ ගොස් අමෙරිකානු ඩොලර් 90ත් 105ත් ඉක්මවා තිබෙනවා.
මේ කාලපරිච්ඡේද දෙක සසඳන විට එදා ජාත්යන්තර වෙළෙඳපොළ තත්ත්වය සහ අද ජාත්යන්තර වෙළෙඳපොළ තත්ත්වය අතර සැලකිය යුතු වෙනසක් තිබෙන බව කෙනෙකුට වැටහෙනවා.
රනිල් වික්රමසිංහ මහතාගේ පාලන සමයේදී මෙරට ඔක්ටේන් 92 පෙට්රල් ලීටරයක මිල රුපියල් 340 ත් 370 ත් අතර වූ අතර ඔටෝ ඩීසල් මිල රුපියල් 310 ත් 360 ත් අතර විය. නමුත් ජාත්යන්තර වෙළෙඳපොළේ පවතින තත්ත්වය අනුව පෙට්රල් රුපියල් 424 ට සහ ඔටෝ ඩීසල් රුපියල් 397 ට අලෙවි වේ.
මෙහිදී තේරුම් ගත යුතු වැදගත්ම දෙය නම් පාලන තන්ත්ර දෙකේදීම පවතින ජාත්යන්තර බොරතෙල් මිල ගණන් නොතකා දේශීය සිල්ලර මිල සංසන්දනය කිරීම ආර්ථික වශයෙන් සම්පූර්ණ තක්සේරුවක් නොවන බවයි.
ජාත්යන්තර වෙළෙඳපොළේ තෙල් මිල අඩු වූ කාලය සහ ගෝලීය අර්බුදය හේතුවෙන් මිල ඉහළ ගිය කාලය සංසන්දනය කරමින් ආණ්ඩුවේ ක්රියා කලාපය විවේචනය කිරීම කිසිසේත් සාධාරණ නැත.
වඩා වැදගත් වන්නේ, වත්මන් රජය පිරිවැය ප්රතිසාධන සූත්රය යටතේ ගණනය කරන ලද සම්පූර්ණ වියදමින් මහජනතාවට ඉන්ධන ලබා නොදීමයි.
දැනට පවතින මිල සූත්රයට අනුව ඔක්ටේන් 92 පෙට්රල් ලීටරයක සැබෑ මිල රුපියල් 481ක් විය යුතු නමුත් රජය එය අලෙවි කරන්නේ රුපියල් 424කටය.මේ හරහා රජය ලීටරයක රුපියල් 57ක වෙනස පිළිගෙන පාරිභෝගිකයන්ට මිල සහන ලබාදෙයි.
එය හුදු සංඛ්යා මත ගණනය කිරීමක් නොවේ. එය ගෝලීය ආර්ථික අර්බුදවලින් පීඩාවට පත් සාමාන්ය ජන ජීවිතය මත ඇති බර ලිහිල් කිරීමට රජය භාර ගන්නා ආර්ථික වගකීමේ ප්රකාශනයකි.
ඇමරිකාව, යුරෝපා රටවල් ඇතුළු බොහෝ රටවල ඉන්ධන මිලට සාපේක්ෂව ශ්රී ලංකාවේ ඉන්ධන මිල අඩු බව ද මෙහිදී සඳහන් කළ යුතුය.
ජාත්යන්තර මිල ඉහළ යාමේ සම්පූර්ණ බලපෑම ජනතාව මත පටවන්නේ නැතිව මිල ස්ථායිකරණ ක්රියාමාර්ග සහ සහනාධාර හරහා සහන සැලසීමට රජය ගන්නා උත්සාහය විවේචනය කිරීම වගකිවයුතු දේශපාලන ප්රවේශයක් විය නොහැක.
ආණ්ඩුවේ ආර්ථික ප්රතිපත්ති විවේචනය කිරීමට විරුද්ධ පක්ෂවලට පූර්ණ ප්රජාතන්ත්රවාදී අයිතියක් ඇත. එහෙත් එම විවේචන ආර්ථික යථාර්ථයන් සහ ජාත්යන්තර වෙළෙඳපොළ තත්ත්වයන් මත පදනම් විය යුතුය.
විශේෂයෙන්ම හර්ෂ ද සිල්වා වැනි ආර්ථික ක්ෂේත්රය පිළිබඳ අවබෝධයක් සහ පළපුරුද්දක් ඇති විපක්ෂයේ මන්ත්රීවරුන් ජාත්යන්තර තෙල් මිල සහ දේශීය ඉන්ධන මිල අතර සම්බන්ධය හොඳින් දනී.
කෙසේ වෙතත්, රනිල් වික්රමසිංහගේ පාලනයට සාපේක්ෂව පෙට්රල් සහ ඩීසල් මිල ඉහළ දමා ජනතාවගේ ජීවන බර වැඩි කිරීමේ වත්මන් රජය ගෙන යන ව්යාපාරය සම්පූර්ණ ආර්ථික පසුබිම ජනතාවගෙන් වසන් කරන ප්රවේශයක් ලෙසයි සැලකෙන්නේ.
ඉන්ධන ලීටරයක මිලෙන් පමණක් රජයක ආර්ථික ක්රියාකාරිත්වය මනින්න බැහැ. ලෝක වෙළෙඳපොළේ තෙල් මිල කීයක් තිබුණාද? ආනයනය සඳහා රටට කොපමණ මුදලක් වැය කිරීමට සිදුවේද? රජය කොපමණ සහනාධාරයක් පිළිගන්නවාද? සම්පූර්ණ වියදම ජනතාව වෙත පැවරෙනවාද? වගේ ප්රශ්න
එය මිනිසුන්ගේ හැඟීම් අවුළුවා රජයට එරෙහිව අමනාපයක් ඇති කිරීමට පහසු දේශපාලන උපක්රමයක් විය හැකිය. නමුත් ඒකෙන් රටේ ආර්ථික ප්රශ්න විසඳෙන්නේ නැහැ. කරුණු වසන් කරන විවේචනවලින් සිදුවන්නේ ජනතාව දැනුවත් කිරීම වෙනුවට ඔවුන් නොමග යැවීම පමණි.
අද ශ්රී ලංකාව මුහුණ දී සිටින ආර්ථික අභියෝග එක රැයකින් මතු වූවක් නොවේ. නිදන්ගත ආර්ථික දුර්වලතා සහ ජාත්යන්තර අර්බුද එක්වී රටේ වත්මන් තත්ත්වය නිර්මාණය කර ඇත. මේවායින් රට ගොඩගැනීමට නම් තිරසාර ආර්ථික ප්රතිපත්තියක්, වගකිවයුතු පාලනයක් සහ ජනතා අවශ්යතාවලට මුල්තැන දෙන දේශපාලන ප්රවේශයක් අවශ්ය වේ.
අද ජනතාව බලාපොරොත්තු වන්නේ ආණ්ඩුවට බනින දේශපාලනය පමණක් නොවේ. ඒ වෙනුවට රටේ ආර්ථිකය සුරකින, ජීවන වියදම අඩු කරන, තරුණ පරම්පරාවට බලාපොරොත්තු සහිත අනාගතයක් ඇති කරන, සෞභාග්යමත් ශ්රී ලංකාවක් ගොඩනඟන්නේ වගකිවයුතු දේශපාලනයයි.
ආණ්ඩුව විවේචනය කිරීම විපක්ෂයේ ප්රජාතන්ත්රවාදී යුතුකමකි. එහෙත් දේශපාලන වාසි තකා ජාත්යන්තර අර්බුද සහ ආර්ථික අභියෝග විකෘති කරමින් ජනතාව තුළ බියක් හා අසහනයක් ඇති කිරීම සෞඛ්ය සම්පන්න ප්රජාතන්ත්රවාදී දේශපාලනයකට හිතකර නොවේ.
ජාතික ජනබල රජය කෙරෙහි ජනතා බලාපොරොත්තු සහ වගකීම් අතිමහත්ය. එම අපේක්ෂාවන් ඉටුකර ගැනීමට රජය ගන්නා සෑම ක්රියාවක්ම මහජන අවශ්යතා අනුව විනිශ්චය කළ යුතුය. ආණ්ඩුව වරදක් කරනවා නම් පෙන්වා දිය යුතුයි; එමෙන්ම ජාත්යන්තර අර්බුද මැද වුවද ජනතාවට ලබා දෙන සහන සහ ආර්ථිකය ආරක්ෂා කිරීමට ගන්නා උත්සාහය සාධාරණ ලෙස පිළිගත යුතුය.
මක්නිසාද යත් රටේ ආර්ථිකය යථා තත්ත්වයට පත් කිරීම පක්ෂයක ජයග්රහණයක් පමණක් නොවන බැවිනි. එය සමස්ත ජනතාවගේ අනාගතය හා බැඳුණු ජාතික වගකීමකි.
දේශපාලන විවේචනවලින් පමණක් ජනතාවගේ ජීවන තත්ත්වය උසස් කළ නොහැක. කරුණු මත පදනම් වූ වාද විවාද, වගකිවයුතු දේශපාලන දායකත්වය සහ ජනතා අවශ්යතාවලට මුල් තැන දෙන තීරණ රට ඉදිරියට ගෙන යනු ඇත.
එබැවින් ඉන්ධන මිල පමණක් පදනම් කරගෙන රජයට එරෙහිව උද්ඝෝෂණ කරනවා වෙනුවට විරුද්ධ පක්ෂ අවංකව ජාත්යන්තර වෙළෙඳපොළේ යථාර්ථය සහ රජය ජනතාව වෙනුවෙන් භාර ගන්නා ආර්ථික වගකීම පිළිබඳව අවංකව තක්සේරු කළ යුතුය. ජනතා වරම වෙනසක් සඳහා ය; එම වෙනස සුරක්ෂිත කර රට සෞභාග්යමත් අනාගතයක් කරා ගෙන යාම සැමගේ වගකීමයි!
අහමඩ් ඉර්ෂාඩ්.
අද දිනකරන්
10-11-2026
සිංහල පරිවර්තනය සමග) சர்வதேச நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் NPP அரசு!
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 12, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 12, 2026
Rating:


கருத்துகள் இல்லை: