Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

සිංහල පරිවර්තනය සමග) இலவசக் கல்வியும் மருத்துவர்களின் வெளியேற்றமும்: வைத்தியர் ஷாபி முன்வைக்கும் கருத்துக்கள்!



இலவசக் கல்வியின் மூலம் வைத்தியர்களாக உருவானவர்கள் வெளிநாடுகளில் பணியாற்றுவதற்கான தனிப்பட்ட உரிமையையும் வாழ்க்கைத் தெரிவுகளையும் மதிக்க வேண்டும். அதே வேளை, நாட்டின் வரிப்பணத்தில் கல்வி கற்றவர்களின் அறிவும் திறமையும் தாய்நாட்டின் முன்னேற்றத்திற்கும் மக்களின் நலனுக்கும் பயன்பட வேண்டும் என்ற நாட்டுப்பற்றுச் சிந்தனை அவசியமாகும்.

கியூபாவின் முன்னுதாரணத்தைப் போன்று, உள்நாட்டின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், இலங்கை மருத்துவர்களின் சர்வதேசச் சேவையையும் விரிவுபடுத்தி நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டும் வாய்ப்புகளை ஆராய வேண்டும்.

தனிமனித உரிமைகளுக்கும், நாட்டின் மீதான தார்மீகப் பொறுப்புக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்த வேண்டிய காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். 

இலங்கையின் இலவசக் கல்வித் திட்டத்தின் மூலம் மருத்துவக் கல்வியைப் பூர்த்தி செய்து வைத்தியராக உருவானவர் வைத்தியர் ஷாபி. கடந்த காலத்தில் அவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் துர்ப்பாக்கியமான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது, அவர் விரும்பியிருந்தால் இந்த நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருக்க முடியும். ஆனால், நாட்டின் மீதும் மக்களின் மீதும் கொண்டிருந்த பற்றின் காரணமாக அவர் அவ்வாறு செய்யவில்லை.

இத்தகைய பின்னணியில், இலங்கையின் இலவசக் கல்வித் திட்டத்தின் ஊடாகப் பல்வேறு சலுகைகளைப் பெற்று, MBBS பட்டத்துடன் வைத்தியர்களாக உருவாகி, பின்னர் மேலதிக மருத்துவக் கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் வைத்தியர்கள் மீண்டும் இலங்கைக்குத் திரும்பி மருத்துவச் சேவையை வழங்கத் தவறுவது தொடர்பாக எழுப்பப்படுகின்ற கேள்விக்கு வைத்தியர் ஷாபியின் நிலைப்பாடு என்ன?  என்பதற்கு  அவர் வழங்கிய பதில் இவ்வாறு அமைந்திருந்தது. 

இது நீண்டகாலமாக நிலவிவரும் ஒரு பிரச்சினையாகும். இதனை உணர்ச்சிகளின் அடிப்படையில் மாத்திரம் அணுகாமல், நடுநிலையாகவும் அறிவியல் சார்ந்தும் சமூகப் பொறுப்புணர்வுடனும், நாட்டுப்பற்றுடனுடம் ஆராய்ந்து சரியான தீர்வை நோக்கி நகர வேண்டிய தேவை உள்ளது.

வைத்தியத்துறையாக இருந்தாலும் ஏனைய துறைகளாக இருந்தாலும், ஒருவர் தனது கல்வி மற்றும் கடின உழைப்பின் மூலம் ஒரு குறிப்பிட்ட நிலையை அடைவதன் நோக்கம் சமூகத்தில் கண்ணியமான வாழ்க்கையை அமைத்துக்கொள்வதாகும். அவ்வாறு பல்வேறு சிரமங்களைக் கடந்து அந்த நிலையை அடைந்த ஒருவர், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்பார்த்த மகிழ்ச்சியையும், வசதிகளையும் பெற்றுக்கொள்ள முடியாத சூழல் உருவாகும்போது, அதனைப் புரிந்துகொள்ள வேண்டிய பொறுப்பு  சமூகத்திற்கும் இருக்கின்றது.

மேலதிகக் கல்வியை வெளிநாடுகளில் பூர்த்தி செய்து இலங்கைக்குத் திரும்பும் வைத்தியர்கள், சில சந்தர்ப்பங்களில் தொலைதூரப் பிரதேசங்களில் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இதனால் தாங்கள் கற்றுக்கொண்ட நவீன மருத்துவ அறிவையும், நிபுணத்துவத்தையும் எதிர்பார்த்த அளவில் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகலாம். அதேவேளை, தங்களது குடும்ப வாழ்க்கை, பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் தொடர்பாக அவர்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது என்பதை அவர்களுடன் உரையாடியபோது அறிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.


இந்த அடிப்படையில், தங்களது தனிப்பட்ட வாழ்க்கையைக் கருத்திற்கொண்டு வெளிநாடுகளில் வாழ்வதற்கும், பணியாற்றுவதற்கும் அவர்கள் தீர்மானிப்பதில் நியாயமான காரணங்கள் இருக்கின்றன என்பதை நான் உணர்கின்றேன்.

ஆனால், இதன் மறுபக்கத்தையும் நாம் மறந்துவிட முடியாது. இந்த நாட்டின் பிரஜைகள் என்ற வகையிலும், நாட்டு மக்களின் வரிப்பணத்தின் மூலம் இலவசக் கல்வியைப் பெற்றவர்கள் என்ற வகையிலும், இந்த நாட்டு மக்களுக்குச் சேவையாற்றுவதில் மகிழ்ச்சியடையக் கூடிய நாட்டுப்பற்றும், சமூகப் பொறுப்புணர்வும் எம்மிடம் இருக்க வேண்டும்.

நாம் வெளிநாடுகளுக்குச் சென்றாலும், எங்கு வாழ்ந்தாலும், எமது கல்வியைப் பூர்த்திசெய்வதற்குப் பங்களித்தது இந்த நாட்டு மக்களின் வரிப்பணம் என்ற நினைவும், தார்மீகப் பொறுப்பும் எம்மிடம் இருக்க வேண்டும். எமது அறிவையும் ஆற்றலையும் இந்த நாட்டு மக்களின் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்ற தூய்மையான எண்ணத்தை வளர்த்துக்கொள்வதும் அவசியமாகும்.

அதேநேரம், வெளிநாடுகளில் மேலதிகக் கல்வியைப் பூர்த்திசெய்து திரும்பும் வைத்தியர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, பொருளாதார நிலைமை மற்றும் அவர்களது பிள்ளைகளின் எதிர்காலம் ஆகியவற்றையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும். 


அவர்களின் வாழ்வியல் தேவைகளுக்கு ஏற்ற வகையில் எதிர்காலக் கொள்கை மற்றும் நிர்வாகக் கட்டமைப்புகளில் தேவையான மாற்றங்களைக் கொண்டுவருவதன் மூலம், அவர்களை நாட்டிலேயே தங்கியிருந்து சேவையாற்ற ஊக்குவிக்க முடியும். இத்தகைய அணுகுமுறையே இப்பிரச்சினைக்கு நிலையான தீர்வை உருவாக்க முடியும் என்பது வைத்தியர் ஷாபியினுடைய முதலில் தான் ஒரு இலங்கையர் என்ற வட்டத்திற்குள் நின்று கூறிய கருத்தாக இருந்தது.

மேலும், பல தசாப்தங்களுக்குப் பின்னர், இடதுசாரிச் சிந்தனைகளையும் அனைவருக்கும் சமத்துவமான வாழ்க்கை என்ற கோட்பாட்டையும் மையமாகக் கொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலங்கையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள சூழலில், மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவச் சேவை தொடர்பான  விரிவான எதிர்காலத் திட்டமிடல் நோக்கிய பார்வை உள்ளது.

உலகில் இலவசக் கல்வியின் மூலம் மருத்துவத் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ள நாடுகளில் கியூபா முக்கியமான எடுத்துக்காட்டாக உள்ள நாடாகும். உலகின் பல்வேறு நாடுகளில் ஏற்படும் அனர்த்தங்கள், அவசரத் தேவைகள் மற்றும் மருத்துவப் பணியாளர் பற்றாக்குறை போன்ற சூழல்களில் கியூபா தனது மருத்துவர்களையும், நிபுணர்களையும் சர்வதேச மருத்துவச் சேவைகளில் ஈடுபடுத்தி வருகின்றது.

இலவசக் கல்வியின் மூலம் அதிகளவிலான மருத்துவர்களையும் மருத்துவ நிபுணர்களையும் உருவாக்கி, அவர்களின் சேவையை சர்வதேச மட்டத்தில் விரிவுபடுத்தியதன் மூலம், மருத்துவச் சேவையை நாட்டின் வெளிநாட்டு வருமானத்துடன் தொடர்புபடுத்தும் ஒரு அணுகுமுறையை கியூபா முன்னெடுத்துள்ளது.

இதே போன்ற சிந்தனையை இலங்கையிலும் நடை முறைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து நாம் ஆராய வேண்டும். இலங்கையில் இலவசக் கல்வியின் மூலம் மருத்துவர்களையும் நிபுணர்களையும் உருவாக்குவதுடன், உள்நாட்டின் மருத்துவத் தேவைகளையும் முழுமையாகப் பூர்த்தி செய்து கொண்டு, சர்வதேச நாடுகளுக்கும் எமது மருத்துவச் சேவைகளை வழங்கக்கூடிய ஒரு நிலையை உருவாக்க முடியும்.

இலங்கைக்கு வெளியே பல நாடுகளில் மருத்துவத் துறைக்கான தேவையும் சேவைக்கான வாய்ப்புகளும் காணப்படுகின்றன. இலங்கையில் மருத்துவக் கல்வியைப் பூர்த்திசெய்து சர்வதேசத் தரத்திலான தகுதிகளைப் பெற்றவர்கள் வெளிநாடுகளில் பணியாற்றுவதன் மூலம் நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரக்கூடிய வாய்ப்புகளும் அதிகளவில் உள்ளன.

அதேவேளை, இலவசக் கல்விக்கு அப்பால், இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவப் பட்டப்படிப்பைத் தொடரும் மாணவர்களும் இருக்கின்றார்கள். தற்போது வெளிநாடுகளில் மருத்துவக் கல்வியைப் பூர்த்தி செய்வதற்கு சுமார் நான்கு முதல் ஐந்து கோடி ரூபாய் வரை செலவாகும் நிலை காணப்படுகின்றது. இத்தகைய சூழலில், உள்நாட்டில் மருத்துவக் கல்வியின் தரத்தையும் வசதிகளையும் மேம்படுத்துவது மிக முக்கியமானதாகும்.

இதற்காகப் புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள அரசாங்கம் நீண்டகால இலக்குடன் திட்டமிட்டு முன்னோக்கிப் பயணிக்கும் என்ற நம்பிக்கை நாட்டு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. பல்கலைக் கழகங்களில் காணப்படும் அடிப்படை வசதிகளின் குறைபாடுகள், நவீன தொழில்நுட்பத்தின் தேவைகள், மருத்துவ ஆராய்ச்சிக்கான வாய்ப்புகள் மற்றும் நிபுணத்துவப் பயிற்சிகளுக்கான கட்டமைப்புகள் ஆகியவற்றில் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும். இவற்றை முறையாக மேம்படுத்தினால், கியூபாவைப் போன்றே மருத்துவத் துறையில் சர்வதேச அளவில் தனது பங்களிப்பை விரிவுபடுத்தும் நாடாக இலங்கையையும்
 உருவாக்க முடியும்.

வைத்தியர் ஷாபியின் குறித்த விடயம் சம்பந்தமாக ஆழமாக நோக்கும்போது, அவர் முன்வைப்பது வெறுமனே வைத்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடாது என்ற கருத்தல்ல என்பது தெளிவாகின்றது. மாறாக, தனி மனிதர்களின் வாழ்க்கைத் தெரிவுகளையும் அவர்களது குடும்ப எதிர்காலத்தையும் மதிக்கும் அதேவேளை, இலவசக் கல்வியின் மூலம் பெற்ற அறிவு நாட்டுக்கும் மக்களுக்கும் எவ்வாறு பயனளிக்க வேண்டும் என்ற விரிவான சமூகப் பார்வையையே அவர் வெளிப்படுத்தி இருக்கின்றார்

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது கட்டடங்களாலும் பொருளாதாரப் புள்ளி விபரங்களாலும் மாத்திரம் தீர்மானிக்கப்படுவதில்லை. அந்த நாட்டில் உருவாக்கப்படும் அறிவும், திறமையும்,  மனித வளமும் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதிலேயே அதன் உண்மையான முன்னேற்றம் தங்கியுள்ளது.

இலவசக் கல்வி என்பது ஒரு தனிமனிதனுக்கு வழங்கப்படும் சலுகை மாத்திரமல்ல; அது ஒரு சமூகத்தின் எதிர்காலத்தில் செய்யப்படும் முதலீடாகும். அந்த முதலீட்டின் பயனை மக்களும் நாடும் பெற்றுக்கொள்ளும் வகையில் அரச கொள்கைகள் அமைய வேண்டும். அதேநேரம், அந்தக் கல்வியின் மூலம் உருவானவர்களும் தங்களது சமூகப் பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும்.

நாட்டுப்பற்று என்பது ஒருவர் வெளிநாட்டுக்குச் செல்லாமல் இருப்பதில் மாத்திரம் தங்கியிருக்கவில்லை. எங்கு வாழ்ந்தாலும் தன்னை உருவாக்கிய சமூகத்தை மறக்காமல், தனது அறிவையும் திறமையையும் நாட்டின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்துவதற்கான மனப்பக்குவத்திலேயே அதன் உண்மையான அர்த்தம் அடங்கியுள்ளது.

வைத்தியர் ஷாபி முன்வைக்கும் இந்தச் சிந்தனை, இலவசக் கல்வி, மருத்துவர்களின் எதிர்காலம், நாட்டின் பொருளாதாரம் மற்றும் மனித வள அபிவிருத்தி ஆகியவற்றை ஒரே புள்ளியில் இணைத்து விவாதிக்க வேண்டிய அவசியத்தை நினைவூட்டுகின்ற அதே இடத்தில் சமத்துவமும் நாட்டுப்பற்றுடைய சிந்தனையும் தனிமனித வாழ்வில் எந்தளவு முக்கியம் என்பதை நடுநிலை சிந்தனையாளர்களை மேலும் சிந்திக்க வைக்கும் விடயமாகவும் உள்ளது.

அஹமட் இர்ஷாட்.
இன்றைய தினகரன் பத்திரிகைக்காக,
12-11-2026

නොමිලේ අධ්‍යාපනය සහ වෛද්‍යවරුන්ගේ නික්මයාම: ආචාර්ය ශාෆි විසින් ඉදිරිපත් කරන ලද අදහස්!

නිදහස් අධ්‍යාපනය මඟින් වෛද්‍යවරුන් බවට පත් වූ අයගේ විදේශයන්හි සේවය කිරීමට ඇති පුද්ගලික අයිතියත්, ඔවුන්ගේ ජීවන තේරීම්ත් ගරු කළ යුතුය. ඒ සමඟම, ජාතියේ බදු මුදලින් අධ්‍යාපනය ලැබූ අයගේ දැනුම හා කුසලතා මව්බිමේ ප්‍රගතිය සහ ජනතාවගේ සුබසාධනය සඳහා යොදා ගැනීම පිණිස දේශප්‍රේමී හැඟීමක් වර්ධනය කිරීම අත්‍යවශ්‍ය වේ.

කියුබාවේ ආදර්ශය අනුගමනය කරමින්, දේශීය වෛද්‍ය අවශ්‍යතා සපුරාලීමට ඇති අවස්ථා සොයා බැලිය යුතු අතර, ඒ සමඟම ශ්‍රී ලාංකික වෛද්‍යවරුන්ගේ ජාත්‍යන්තර සේවාව පුළුල් කරමින් රටට විදේශ විනිමය උපයා ගැනීමටද කටයුතු කළ යුතුය.

අප ජීවත් වන්නේ පුද්ගල අයිතිවාසිකම් සහ ජාතිය පිළිබඳ සදාචාරාත්මක වගකීම අතර සමතුලිතතාවක් ඇති කළ යුතු යුගයක ය.
+++++++++++++++++

ඩොක්ටර් ශාෆි යනු ශ්‍රී ලංකාවේ නිදහස් අධ්‍යාපන පද්ධතිය හරහා වෛද්‍ය අධ්‍යාපනය සම්පූර්ණ කර වෛද්‍යවරයෙකු වූ වෛද්‍යවරයෙකි. අතීතයේ ඔහුට එරෙහිව සිදු කළ බව කියන සැලසුම්ගත ක්‍රියා සහ අවාසනාවන්ත සිදුවීම් සැලකිල්ලට ගත් විට, ඔහුට අවශ්‍ය වූවා නම්, මේ රට හැර ගොස් යුරෝපීය රටවල තම ජීවිතය පිහිටුවා ගත හැකිව තිබුණි. එහෙත්, රටට සහ එහි ජනතාවට තිබූ බැඳීම නිසා ඔහු එසේ නොකළේය.

මෙම පසුබිම යටතේ, ශ්‍රී ලංකාවේ නිදහස් අධ්‍යාපන පද්ධතිය හරහා විවිධ ප්‍රතිලාභ ලබාගෙන එම්.බී.බී.එස්. උපාධියක් සමඟ වෛද්‍යවරුන් බවට පත්ව, පසුව වැඩිදුර වෛද්‍ය අධ්‍යාපනය සඳහා විදේශගත වී, ඉන්පසු ශ්‍රී ලංකාවට නැවත පැමිණ වෛද්‍ය සේවා සැපයීමට අසමත් වන වෛද්‍යවරුන් පිළිබඳව මතු කළ ප්‍රශ්නය සම්බන්ධයෙන් ඩොක්ටර් ශාෆිගේ ස්ථාවරය කුමක්ද? ඔහුගේ පිළිතුර මෙසේ විය.

මෙය දිගුකාලීන ගැටලුවකි. එයට ප්‍රවේශ විය යුත්තේ හැඟීම් මත පමණක් නොව, නිරපේක්ෂ, විද්‍යාත්මක, සමාජ වගකීමෙන් යුතු සහ දේශප්‍රේමී ආකාරයකින් වන අතර, නිවැරදි විසඳුම කරා ගමන් කළ යුතුය.

වෛද්‍ය වෘත්තියේ හෝ වෙනත් ඕනෑම ක්ෂේත්‍රයක හෝ, අධ්‍යාපනය සහ මහන්සි වැඩ තුළින් යම් තත්ත්වයකට පත්වන පුද්ගලයෙකුගේ අරමුණ වන්නේ සමාජය තුළ ගෞරවනීය ජීවිතයක් ගොඩනඟා ගැනීමයි. බොහෝ දුෂ්කරතා ජයගෙන එම තත්ත්වයට පත්වූ කෙනෙකුට තම පෞද්ගලික ජීවිතයේදී අපේක්ෂා කළ සතුට සහ පහසුකම් ලබා ගැනීමට නොහැකි වන විට, එම තත්ත්වය තේරුම් ගැනීම සඳහා සමාජයටද වගකීමක් ඇත.

විදේශයන්හි උසස් අධ්‍යාපනය සම්පූර්ණ කර ශ්‍රී ලංකාවට නැවත පැමිණෙන වෛද්‍යවරුන්ට, සමහර අවස්ථාවල දුරස්ථ ප්‍රදේශවල සේවය කිරීමට සිදුවේ. එහි ප්‍රතිඵලයක් ලෙස, ඔවුන් ලබාගත් නවීන වෛද්‍ය දැනුම සහ විශේෂඥතාව තමන් අපේක්ෂා කළ මට්ටමට භාවිතා කිරීමට නොහැකි වන තත්ත්වයක් ඇති විය හැක. ඒ සමඟම, ඔවුන් සමඟ කළ සංවාද හරහා, පවුල් ජීවිතය, දරුවන්ගේ අධ්‍යාපනය සහ ඔවුන්ගේ අනාගතය පිළිබඳව තිබූ අපේක්ෂා ඉටු කර ගැනීමට ඔවුන්ට නොහැකි වන බව මට දැන ගැනීමට ලැබුණි.

මේ පදනම මත, ඔවුන්ගේ පෞද්ගලික ජීවිතයන් ද සැලකිල්ලට ගනිමින්, විදේශගතව ජීවත් වීමට හා වැඩ කිරීමට තීරණය කිරීම සඳහා ඔවුන්ට වලංගු හේතු ඇති බව මට වැටහේ.

කෙසේ වෙතත්, මෙම කරුණේ අනෙක් පැත්ත අපට අමතක කළ නොහැක. මෙම රටේ පුරවැසියන් ලෙසත්, මේ ජාතියේ ජනතාවගේ බදු මුදලින් නොමිලේ අධ්‍යාපනය ලබා ඇති පුද්ගලයන් ලෙසත්, මෙම රටේ ජනතාවට සේවය කිරීමෙන් තෘප්තියක් ලැබීමට අපට හැකි වන පරිදි දේශප්‍රේමය සහ සමාජ වගකීම පිළිබඳ හැඟීමක් අප සතුව තිබිය යුතුය.

අප විදේශගත වුවද, අප කොතැනක ජීවත් වුවද, අපගේ අධ්‍යාපනය සම්පූර්ණ කිරීමට දායක වූයේ මෙම රටේ ජනතාවගේ බදු මුදල් බවට ඇති අවබෝධය සහ සදාචාරාත්මක වගකීම අප රඳවා තබා ගත යුතුය. එසේම, මෙම රටේ ජනතාවගේ යහපත සඳහා අපගේ දැනුම සහ හැකියාවන් භාවිතා කිරීමට ඇති පිරිසිදු අරමුණ අප තුළ වර්ධනය කරගැනීම අත්‍යවශ්‍ය වේ.

එමෙන්ම, විදේශයන්හි උසස් අධ්‍යයන අවසන් කර නැවත පැමිණෙන වෛද්‍යවරුන්ගේ පෞද්ගලික ජීවිත, ආර්ථික තත්ත්වයන් සහ ඔවුන්ගේ දරුවන්ගේ අනාගතය ද රජය සැලකිල්ලට ගත යුතුය.

ඔවුන්ගේ ජීවන අවශ්‍යතාවන්ට ගැළපෙන ආකාරයෙන් අනාගත ප්‍රතිපත්ති සහ පරිපාලන ව්‍යුහයන්ට අවශ්‍ය වෙනස්කම් හඳුන්වා දීමෙන්, ඔවුන්ට රට තුළ රැඳී සිට මෙහි සේවය කිරීමට උනන්දු කළ හැකිය. ශ්‍රී ලාංකිකයෙකු වීම මුලික කරගෙන, එවැනි ප්‍රවේශයක් පමණක් මෙම ගැටලුවට ස්ථිර විසඳුමක් නිර්මාණය කළ හැකි බව ඩොක්ටර් ශාෆිගේ අදහස විය.

තවද, දශක කිහිපයකට පසුව, ජනතා විමුක්ති පෙරමුණ විසින් නායකත්වය දෙන, වාමවාදී අදහස් සහ සියල්ලන්ට සමාන ජීවිතයක මූලධර්මය මත කේන්ද්‍රගත වූ ජාතික ජන බලවේග රජය ශ්‍රී ලංකාවේ පාලන වගකීම භාරගෙන ඇති පසුබිමක, වෛද්‍ය අධ්‍යාපනය සහ වෛද්‍ය සේවා පිළිබඳ සම්පූර්ණ අනාගත සැලසුම්කරණය සඳහා වූ දෘෂ්ටිකෝණයක් පවතී.

නිදහස් අධ්‍යාපනය හරහා වෛද්‍ය ක්ෂේත්‍රයේ විශිෂ්ට ප්‍රගතියක් අත්කරගෙන ඇති ලෝකයේ රටවල් අතර කියුබාව වැදගත් උදාහරණයකි. ලෝකයේ විවිධ රටවල ආපදා, හදිසි අවස්ථා සහ වෛද්‍ය කාර්ය මණ්ඩල හිඟය වැනි තත්ත්වයන්හිදී, කියුබාව සිය වෛද්‍යවරුන් සහ විශේෂඥයන් ජාත්‍යන්තර වෛද්‍ය සේවාවන් සඳහා යොදවා ඇත.

නිදහස් අධ්‍යාපනය මගින් විශාල සංඛ්‍යාවක වෛද්‍යවරුන් සහ වෛද්‍ය විශේෂඥයන් බිහි කරමින් සහ ඔවුන්ගේ සේවාවන් ජාත්‍යන්තර මට්ටමින් පුළුල් කරමින්, කියුබාව වෛද්‍ය සේවාවන් රටේ විදේශ ආදායම සමඟ සම්බන්ධ කරන ප්‍රවේශයක් අනුගමනය කර ඇත.

ශ්‍රී ලංකාවේද එවැනිම ප්‍රවේශයක් ක්‍රියාත්මක කිරීමේ හැකියාවන් අපි විමසා බැලිය යුතුය. ශ්‍රී ලංකාවේ, නිදහස් අධ්‍යාපනය මගින් වෛද්‍යවරුන් සහ විශේෂඥයන් බිහි කරමින්, දේශීය වෛද්‍ය අවශ්‍යතා සම්පූර්ණයෙන්ම සපුරාලන අතරම, අපගේ වෛද්‍ය සේවාවන් වෙනත් රටවලටද සැපයිය හැකි තත්ත්වයක් නිර්මාණය කළ හැකිය.

ශ්‍රී ලංකාවෙන් පිටත බොහෝ රටවල වෛද්‍ය ක්ෂේත්‍රයට සහ සේවා අවස්ථාවන්ට ඉල්ලුමක් පවතී. ශ්‍රී ලංකාවේ වෛද්‍ය අධ්‍යාපනය සම්පූර්ණ කර ජාත්‍යන්තරව පිළිගත් සුදුසුකම් ලබා ගන්නා අයටද විදේශයන්හි සේවය කිරීමට සහ එමඟින් රටට විදේශ විනිමය උපයා දීමට ප්‍රමාණවත් අවස්ථා ඇත.

ඒ සමඟම, නොමිලේ අධ්‍යාපනයට අමතරව, තම වෛද්‍ය උපාධි අධ්‍යයන දිගටම කරගෙන යාම සඳහා ශ්‍රී ලංකාවෙන් විදේශ රටවලට යන සිසුන් ද සිටිති. වර්තමානයේ, විදේශයක වෛද්‍ය අධ්‍යාපනය සම්පූර්ණ කිරීමට රුපියල් කෝටි හතරක් හෝ පහක් පමණ වැය වේ. එවැනි පසුබිමක, රට තුළ වෛද්‍ය අධ්‍යාපනයේ ගුණාත්මකභාවය සහ පහසුකම් වැඩිදියුණු කිරීම අතිශයින්ම වැදගත් වේ.

මෙම අරමුණ සඳහා, රටේ ජනතාව නවයෙන් භාරගත් රජය හොඳින් සැලසුම් කළ දිගුකාලීන දැක්මක් සමඟ ඉදිරියට යනු ඇතැයි විශ්වාස කරති. විශ්වවිද්‍යාලවල පවතින මූලික පහසුකම්වල අඩුපාඩු, නවීන තාක්ෂණයේ අවශ්‍යතා, වෛද්‍ය පර්යේෂණ සඳහා ඇති අවස්ථා, සහ විශේෂිත පුහුණුව සඳහා අවශ්‍ය යටිතල පහසුකම් පිළිබඳව නිසි අවධානය යොමු කළ යුතුය. මේවා නිසි ලෙස වැඩිදියුණු කළහොත්, කියුබාව මෙන්ම ශ්‍රී ලංකාවද ජාත්‍යන්තර මට්ටමින් වෛද්‍ය ක්ෂේත්‍රයේ තම දායකත්වය පුළුල් කරන රටක් බවට සංවර්ධනය කළ හැකිය.

ඩොක්ටර් ශාෆි සම්බන්ධ කාරණය ගැඹුරින් විමසා බැලූ විට පැහැදිලි වන්නේ ඔහු ඉදිරිපත් කරන්නේ වෛද්‍යවරුන් විදේශගත නොවිය යුතුය යන මතය පමණක් නොවන බවයි. ඒ වෙනුවට, පුද්ගලයන්ගේ ජීවිත තේරීම් සහ ඔවුන්ගේ පවුල්වල අනාගතය ගරු කරමින්, නිදහස් අධ්‍යාපනයෙන් ලබාගත් දැනුම රටට සහ එහි ජනතාවට ප්‍රයෝජනවත් විය යුත්තේ කෙසේද යන්න පිළිබඳ පුළුල් සමාජ දෘෂ්ටිකෝණයක් ඔහු ප්‍රකාශ කර ඇත.

රටක සංවර්ධනය තීරණය වන්නේ ගොඩනැගිලි හෝ ආර්ථික සංඛ්‍යාලේඛන මත පමණක් නොවේ. එහි සැබෑ ප්‍රගතිය රඳා පවතින්නේ එම රට තුළ නිර්මාණය වන දැනුම, කුසලතා සහ මානව සම්පත් කෙසේ භාවිතා කරන්නේද යන්න මතය.

නිදහස් අධ්‍යාපනය යනු හුදෙක් පුද්ගලයකුට ලබා දෙන වරප්‍රසාදයක් නොවෙයි; එය සමාජයක අනාගතය වෙනුවෙන් කරන ආයෝජනයකි. රජයේ ප්‍රතිපත්ති එම ආයෝජනයෙන් ජනතාවටත් ජාතියටත් ප්‍රයෝජන ලැබෙන පරිදි සකස් කළ යුතුය. ඒ සමඟම, එම අධ්‍යාපනයෙන් හැඩගැසෙන අය ද සමාජ වගකීමක් ඇතිව ක්‍රියා කළ යුතුය.

දේශප්‍රේමය යනු පුද්ගලයකු රට තුළම සිට විදේශගත නොවී සිටීම මත පමණක් රඳා නොපවතී. එහි සැබෑ අර්ථය වන්නේ, කවර තැනක ජීවත් වුවද තමන්ව හැඩගැස්වූ සමාජය අමතක නොකර, තම දැනුම හා කුසලතා ජාතියේ ප්‍රගතිය සඳහා යොදා ගැනීමේ මනසික පරිණතභාවයයි.

ඩොක්ටර් ශාෆිගේ දෘෂ්ටිකෝණය අපට මතක් කර දෙන්නේ, නිදහස් අධ්‍යාපනය, වෛද්‍යවරුන්ගේ අනාගතය, රටේ ආර්ථිකය සහ මානව සම්පත් සංවර්ධනය යන කරුණු එකම තැනකදී සාකච්ඡා කිරීමේ අවශ්‍යතාවයයි. ඒ සමඟම, සමානාත්මතාවය සහ දේශප්‍රේමී චින්තනය පුද්ගලයකුගේ ජීවිතයේ කොතරම් වැදගත්ද යන්න පිළිබඳව තවදුරටත් සිතා බැලීමට මධ්‍යස්ථ චින්තකයන් පෙළඹවෙන කරුණක් ලෙසද මෙය සේවය කරයි.

අහ්මද් ඉර්ෂාද්.
අද දිනකරන් පුවත්පත සඳහා,
12-11-2026
සිංහල පරිවර්තනය සමග) இலவசக் கல்வியும் மருத்துவர்களின் வெளியேற்றமும்: வைத்தியர் ஷாபி முன்வைக்கும் கருத்துக்கள்! Reviewed by www.lankanvoice.lk on நவம்பர் 12, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.