සිංහල පරිවර්තනය සමග) அநுர குமார உண்மையான மனிதனாக வாழ்கின்றார்(Living Legend) -மருத்துவர் ஷாபி நேர்காணல்- "சிறுபான்மை சமூகத்திற்கு இப்போதுதான் உண்மையான சுதந்திரம்"
සිංහල පරිවර්තනය සමග) அநுர குமார உண்மையான மனிதனாக வாழ்கின்றார்(Living Legend) -மருத்துவர் ஷாபி நேர்காணல்-
"சிறுபான்மை சமூகத்திற்கு இப்போதுதான் உண்மையான சுதந்திரம்"
ஒரு இலங்கைப் பிரஜை என்ற வகையில், இன, மத பேதங்களைக் கடந்து அனைவரும் சமத்துவத்துடனும் சுதந்திரத்துடனும் அச்சமின்றி நிம்மதியாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ள அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசியல் கலாசாரத்தை நான் வரவேற்கின்றேன்.
இனவாதத்தையும் சுயநல அரசியலையும் கடந்து, இடதுசாரிச் சிந்தனையும், இஸ்லாமிய நீதிக் கோட்பாடுகளும் வலியுறுத்தும் சமத்துவம், மனிதநேயம், சகோதரத்துவம், ஊழலற்ற நிர்வாகம் ஆகியவற்றை நிலைநாட்ட வேண்டியது காலத்தின் தேவையாகும்.
முஸ்லிம் சமூகம் தனித்துவ அரசியல் அடையாளங்களுக்குள் முடங்கிவிடாமல், தேசிய ஒற்றுமையிலும் நாட்டின் அபிவிருத்தியிலும் பொறுப்புடன் பங்கேற்க வேண்டும்.
கேள்வி:
இடதுசாரிக் கொள்கையைக் கொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் வழிகாட்டலுடன், பல தசாப்தங்களுக்குப் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றி இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைப் பற்றிய உங்களுடைய பார்வை என்ன?
பதில்:
ஒரு இலங்கைப் பிரஜை என்ற வகையிலும், இந்த நாட்டில் ஐம்பது வருடங்களாக வாழ்ந்து வருபவன் என்ற வகையிலும், உங்களுடைய இக்கேள்விக்குப் பதிலளிக்க விரும்புகின்றேன்.
அதாவது, இந்த நாட்டில் அதிகார மாற்றம் ஏற்பட்டதிலிருந்து, எவ்விதமான இனவாதமும் அற்ற அமைதியான வாழ்க்கையை, குறிப்பாகச் சிறுபான்மைச் சமூகத்தினர் கடந்த இரண்டு வருடங்களாக அனுபவித்து வருகின்றனர் என்றே கூற வேண்டும்.
என்னைப் பொறுத்தமட்டில், சிறுபான்மைச் சமூகத்தினருக்கு இப்போதுதான் முழுமையான சுதந்திரம் கிடைத்துள்ளது என்பதில் உறுதியாக இருக்கின்றேன். ஒரே நீதி, ஒரே சட்டம் என்ற அடிப்படையில், அனைவரும் சமமான முறையில் இலங்கையர்களாக வாழக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.
இதற்கு முன்னர் யார் இனவாதக் கருத்துக்களை மக்கள் மத்தியில் திணித்தார்கள்? அதன் மூலம் எவ்வாறான அரசியல் அறுவடைகளை அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்? என்பதையெல்லாம் நேரடியாகக் கண்ட சமூகமாகவே நாம் வாழ்ந்து வந்தோம்.
முதலில் தன்னை ஓர் இலங்கையராகச் சிந்திக்கும் ஒருவர், தான் சார்ந்த சமூகத்தையும் உண்மையாக நேசிப்பவராகவே இருப்பார். அந்த வகையில், மனச்சாட்சியின் அடிப்படையில் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் சிந்தித்துப் பார்க்கும்போது, பொருளாதாரம், கலாச்சாரம், மார்க்கம், வியாபாரம் மற்றும் சட்ட ரீதியான விடயங்களில் தமது தனித்துவத்தைப் பாதுகாத்துக்கொண்டு, மக்கள் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும், சுயமாகவும் வாழக்கூடிய சூழல், அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இந்த இரண்டு வருட ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கேள்வி:
தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் முஸ்லிம்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லை, றிஸ்வி சாலிக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படவில்லை மற்றும் கல்முனை வடக்கு வைத்தியசாலையின் ஊபெண் ஊழியர்களின் ஆடை விவகாரம் பிரச்சினை என்ற பார்வையில், NPP அரசாங்கமும் பக்கச்சார்பாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இனவாதச் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றது என எதிர்த்தரப்பு முஸ்லிம் அரசியல்வாதிகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை, இந்த நாட்டின் நடுநிலைவாதியாகவும் முஸ்லிம் சமூகத்தால் மதிக்கப்படுகின்ற ஒருவர் என்ற அடிப்படையிலும் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:
தற்பொழுது இலங்கை மக்கள் என்ற வகையில் முஸ்லிம்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அதியுச்ச அதிகாரத்தில் இருந்த கடந்த 2019 ஆம் ஆண்டில், சூழ்ச்சியின் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பம் அல்லது சொல்லொணாத் துயரத்துடன் தண்டிக்கப்பட்டவன் என்ற வகையில் நான்தான் அதனை நேரடியாக அனுபவித்திருக்கின்றேன். அப்பொழுது எந்தக் கட்சியில் இருந்தவர்கள் என்றாலும் சரி, முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய 20க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், அரச தரப்பில் அமைச்சுப் பதவிகளை வகித்தவர்களாகவும் இருந்தாலும் சரி, அவர்கள் தங்களது உள்ளத்தில் கைவைத்துக் கூற வேண்டிய பொறுப்பும் கடமையும் இருக்கின்றது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டில் முஸ்லிம்கள் எப்படியான அச்ச உணர்வுடன், எந்த நேரத்திலும் எதுவும் நடந்துவிடலாம் என்ற சிந்தனையுடன் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்பது இந்த நாடே அறிந்த விடயமாகும். தங்களுடைய வியாபாரம், கல்வி, தூரப் பிரயாணங்கள், கலாசார நிகழ்வுகள், மத அனுஷ்டானங்கள் எனப் பல்வேறு விடயங்களை எப்படியான அச்ச சூழ்நிலையில் முஸ்லிம் சமூகம் முன்னெடுத்தது என்பது, தற்போது அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை விமர்சிப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
சகலருக்கும் சமமான நீதி, சமமான அந்தஸ்து என்ற அடிப்படையில், எல்லோருக்குமான நாடு என்ற எண்ணக்கருவுடன் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ள நிலையில், முஸ்லிம் சமூகத்திற்கான அமைச்சுப் பதவிகள், அரசியல் அதிகாரம் என்ற கோணத்தில் எழுப்பப்படுகின்ற விமர்சனங்களைப் பார்க்கின்றபோது, அவை ஒரு போலியான விடயமாகவே எனக்குத் தோன்றுகின்றன. மீண்டும் பழைய அரசியல் கலாசாரத்திற்கு உயிர்கொடுத்து, பலவீனமான அரசியலின் ஊடாகக் குறிப்பிட்ட ஒரு சாரார் மட்டும் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக முஸ்லிம் சமூகத்தைத் தள்ளிவிடுகின்ற ஒரு சூழ்ச்சியாகவே நான் கருதுகின்றேன்.
இவ்வாறான கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைப்பவர்களின் கடந்தகால அரசியல் வாழ்க்கையைப் பார்ப்போமானால், அவர்கள் சுயநலவாதிகளாகவும், தங்களுடைய தனிப்பட்ட எதிர்பார்ப்புகளை அடைந்து கொள்வதற்காக முஸ்லிம் சமூகத்தைப் பலிகொடுத்தவர்களாகவும் இருந்தார்கள் என நான் கூறுவதில் தவறில்லை என நினைக்கின்றேன். ஆகவே, தற்பொழுது நடைமுறையில் உள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை நான் மிகவும் பாராட்டுவதோடு, சுயநலத்திற்காக அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் அறிவுள்ள சமூகத்தைச் சார்ந்தவர்களாகப் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்பதே எனது பார்வையாகும்.
இந்த ஆட்சியில் நாங்கள் நிம்மதியாக வாழுகின்றோம்; எங்களுடைய மத அனுஷ்டானங்களையும் கலாசார விடயங்களையும் எவ்விதப் பிரச்சினைகளுமின்றி முன்னெடுக்கின்றோம் என்பதை எந்தவொரு மனிதரிடம் கேட்டாலும், அவர்கள் மகிழ்ச்சியுடன் தேசிய மக்கள் சக்தியின் இரண்டு வருட ஆட்சியைப் பற்றிச் சாதகமான கருத்துக்களையே தெரிவிப்பவர்களாக இருக்கின்றார்கள். பௌத்தர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என எவரும், யாருக்கும் பெரியவர்கள் இல்லை என்ற நிலைமை உருவாக்கப்பட்டு, அனைவரும் சமத்துவத்துடன் வாழக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆகவே, கல்முனை வடக்கு வைத்தியசாலையின் ஆடை விவகாரமாக இருக்கட்டும் அல்லது வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்ற விடயங்களாக இருக்கட்டும், அவற்றை அரசியலுக்காக விவாதிப்பதற்கும், மக்களின் உணர்வுகளைத் தூண்டுவதற்கும் சில தரப்பினருக்குத் தேவையான கருப்பொருள்களாக அவை அமைந்துவிடுகின்றன.
ஆனால், சமூகத்தின் நலன் சார்ந்து தூரநோக்குடன் சிந்திப்பவர்கள் அனைவரும் இந்த நாட்டின் அரசியல் அமைப்புடன் இணைந்து பயணிப்பவர்களாகவும் அல்லது இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அங்கீகரித்துச் செயற்படுபவர்களாகவும், ஒருமித்த குரலுடன் கைகோர்த்துப் பயணிக்கின்ற போதுதான் எதிர்காலத்தில் சுபீட்சமானதும், நிலையானதும், சகல இன மக்களும் நிம்மதியாக வாழக்கூடியதுமான இலங்கையைக் கட்டியெழுப்ப முடியும்.
கேள்வி:
கடந்த 2024ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின்போது, வடகிழக்கிலும் வடகிழக்கிற்கு வெளியிலும் வாழுகின்ற சிறுபான்மை முஸ்லிம்களில் கணிசமானவர்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து, அரசாங்கத்திற்கு தோள் கொடுத்திருந்தார்கள். தற்போது இரண்டு வருட ஆட்சிக்காலம் பூர்த்தியாகியுள்ள நிலையில், எதிர்காலத்தில் அரசாங்கத்தை மேலும் பலப்படுத்தி, இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக சிறுபான்மை முஸ்லிம் சமூகமானது எவ்வாறான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என நீங்கள் கருதுகின்றீர்கள்?
பதில்:
அரசியலின் மூலம் முழுமையாக நன்மையடையக்கூடியவர்களாக இந்த நாட்டு மக்கள் இருக்க வேண்டும். உதாரணமாக, வைத்திய சேவையை எடுத்துக்கொண்டால், அதன் மூலம் அதிகளவில் பயனடையக்கூடியவர்களாக இந்த நாட்டின் நோயாளிகளே இருக்க வேண்டும். நாட்டின் அரசியல் அமைப்பு அல்லது அதிகாரப் பரவலாக்கத்தின் ஊடாக நாட்டு மக்களால் அதிகளவில் பயனடைய முடியாத சூழ்நிலை காணப்படுமாயின், அந்த நாட்டுக்கு அரசியல் என்ற ஒரு விடயமே தேவையில்லை.
அந்த வகையில், நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்ப்போமானால், தற்போது இந்த நாட்டில் சிறுபான்மைச் சமூகம் என்ற வகையில் நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழக்கூடிய சூழ்நிலையில் இருக்கின்றோம்.
இவ்வாறான அரசியல் நிலைமையை மேலும் தக்கவைத்துக்கொள்வதில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு பாரிய பொறுப்பு இருப்பதாக நான் பார்க்கின்றேன். கடந்தகால பாரம்பரிய அரசியல் கலாச்சாரத்தில் அரசியல் செய்தவர்களும், அவர்களுக்குப் பின்னால் நின்று கூஜா தூக்கியவர்களும் மக்களைக் குழப்பத்திற்கு உள்ளாக்கும் முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்கள்.
இந்த அரசாங்கம் மக்களுக்கு வழங்கியுள்ள சுபீட்சமான, நிம்மதியான வாழ்க்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற சூழ்ச்சிகளும் மறைமுகத் திட்டங்களும் அனைத்தும் தோல்வியில் முடிவுற்று, உண்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளதை நாம் கண்கூடாகவும், வெளிப்படையாகவும் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.
நாம் எல்லோரும் எதிர்பார்த்ததைப் போன்று நாடு முன்னேற வேண்டும் என்றால், தற்போது அரசாங்கம் முன்னெடுத்துவருகின்ற திட்டங்களையும், மாற்றங்களையும் மேலும் வலுப்படுத்துவதற்கும், நிலையான சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படுவதற்கும் சிறுபான்மை முஸ்லிம் சமூகமானது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் ஒருமித்த குரலுடன் கைகோர்த்துச் செயற்பட வேண்டும் என்பதே காலத்தின் கட்டாயத் தேவையாக உள்ளது என்ற நிலைப்பாட்டில் நான் இருக்கின்றேன்.
கேள்வி:
இடதுசாரிக் கொள்கையில் சமத்துவம், சமவுரிமை, நிம்மதியான வாழ்வு, தோழர்கள் என்ற சொற்பதங்கள் முக்கிய பங்கினை வகிப்பதைப் போன்று, இஸ்லாத்திலும் சமத்துவம், இன நல்லுறவு, நிம்மதியான வாழ்வு, முஹம்மது நபிக்கு உறுதுணையாக நின்ற திண்ணைத் தோழர்கள் என்ற உண்மைத் தத்துவங்களும் இருக்கின்றன. உலகக் கல்வி மற்றும் ஆன்மீக வாழ்க்கை ஆகிய இரண்டிலும் வெற்றியடைந்தவராகவும், அவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவராகவும் உள்ள நீங்கள் இதனை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:
முஹம்மது நபியுடைய காலத்தில் இஸ்லாமிய மார்க்கத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக, அய்யாமுல் ஜாஹிலிய்யா சமூகத்திற்கு எதிராக முஹம்மது நபியுடன் கைகோர்த்து நின்ற திண்ணைத் தோழர்கள் சம்பந்தமாகத் தொலை நோக்குடன் சிந்தித்துப் பார்க்கின்றபோது, அல்லாஹ்வை நம்புகின்ற முஸ்லிம் சமூகமானது, எவராவது அநீதி செய்வதற்கு முயற்சித்தாலோ அல்லது அநீதி செய்தாலோ, இடதுசாரி, வலதுசாரி கட்சி என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற கருத்தில் வாழ்பவர்களாகவே இருக்கின்றனர். இது பொதுவாக சகல மதங்களிலும் வலியுறுத்தப்பட்டுள்ள ஒரு விடயமாகவும் இருக்கின்றது.
அந்த அடிப்படையில், நீங்கள் கூறியதைப் போன்று இடதுசாரிக் கட்சியினுடைய கொள்கைகள் இஸ்லாமிய சிந்தனைக்கு உட்பட்ட, ஊழல் இல்லாத, அநியாயமற்ற, சமத்துவமான நீதி போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளன என்பது தெளிவாகப் புலப்படுகின்ற ஒரு விடயமாக உள்ளது. இவை அனைத்தும் இந்த நாட்டில் நிரந்தரமாக நிலைத்திருக்க வேண்டும் என்பதே எவ்வித சந்தேகங்களுக்கும் அப்பாற்பட்டு எங்களுடைய விருப்பமாகவும் உள்ளது.
கேள்வி:
சுதந்திரத்திற்குப் பின்னர் தேசியக் கட்சிகளுடன் இணைந்து பயணித்த முஸ்லிம் தலைமைகள், 1980ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் தனித்துவ முஸ்லிம் கட்சிகளாக உருவெடுத்தமை ஆகிய இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:
சுதந்திரத்திற்குப் பின்னரான மொழிவாதம், முப்பது வருடகால யுத்தம் ஏற்படுத்திய வடுக்கள் மற்றும் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை போன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு, மறைந்த எம்.எச்.எம். அஷ்ரப் முஸ்லிம்களுக்கான தனித்துவக் கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை இஸ்தாபித்தார். இலங்கையைப் பொறுத்தவரையில், அனைவரும் ஒரு தாய்மக்களாக ஒற்றுமையுடன் வாழ வேண்டுமென்றால், முஸ்லிம்களுக்கான தனித்துவமான அல்லது இன, மத ரீதியாகப் பிரதிபலிக்கும் பெயர்களைக் கொண்ட கட்சிகள் பிரிவினையையும் ஆபத்தையுமே உருவாக்குமே தவிர, வேறு எதையும் சாதிக்க முடியாது என்பதை நாளடைவில் முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கிய அஷ்ரப்பே புரிந்து கொண்டிருந்தார்.
அதனால்தான், தனது மரணத்திற்கு முன்னரே தேசிய ஐக்கிய முன்னணி (NUA) எனும் கட்சியையும் அவர் உருவாக்கியிருந்தார். தாங்கள்தான் முஸ்லிம் தலைமைகள் என்று கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகள், எங்கு சென்றாலும் இன்றும் மறைந்த அஷ்ரப்பின் புகைப்படத்தைத் தங்களது அரசியல் அடையாளமாகப் பயன்படுத்தும் நிலையிலேயே காணப்படுகின்றார்கள். மறைந்த அஷ்ரப்பின் கொள்கைகளையும், கருத்துக்களையும் தற்கால அரசியல்வாதிகள் உண்மையாகவே மதிப்பார்களானால், முஸ்லிம் தனித்துவக் கட்சிகளின் பெயர்களை வைத்துக்கொண்டு முஸ்லிம் சமூகத்தைத் தேசிய அரசியலிலிருந்தும், சகோதர சமூகங்களிலிருந்தும் பிரித்தாளும் அரசியலை ஒருபோதும் முன்னெடுக்க மாட்டார்கள்.
மத ரீதியாக முஸ்லிம்களுக்கான தனித்துவக் கட்சிகள் தோற்றம் பெற்றதன் விளைவாக, பெரும்பான்மை மக்கள் மத்தியில், முஸ்லிம்களுக்குத் தனித்துவமான கட்சி இருக்கின்றபோது ஏன் பௌத்தர்களுக்கான தனித்துவக் கட்சி இருக்கக்கூடாது என்ற கேள்வியும் எழத் தொடங்கும். இன, மத ரீதியான பெயர்களைக் கொண்ட கட்சிகள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் சரியானதாக இருந்தாலும், நடைமுறையில் அவை எவ்விதத்திலும் பொருத்தமற்றவை என்றே நான் கருதுகின்றேன். அதேவேளை, இத்தகைய கட்சிகளின் இருப்பு பிரிவினைவாதத்தைத் தூண்டுவதாகவும் அமையும் என்பதே எனது கருத்தாகும்.
மதத்தின் அல்லது இனத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட தனித்துவக் கட்சிகளை இன்றும் தொடர்ந்து வைத்திருப்பதற்கான காரணமாக பார்க்குமிடத்து, அரசியல்வாதிகள் தங்களது சுயலாபங்களை அடைந்து கொள்வதற்காகவே அன்றி வேறெதுவாகவும் இருக்க முடியாது. ஆகவே, இந்த நாட்டின் ஒரு பொதுமகன் என்ற வகையில், நாட்டின் ஒருமைப்பாட்டைக் கருத்தில் கொண்டு, மத அடையாளங்களுடன் இயங்கும் கட்சிகள் முற்றாக இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நான் இருக்கின்றேன்.
மேலும், கடந்த காலங்களில் தேசிய அரசியலில் பெரும்பான்மைக் கட்சிகளுடன் இணைந்து பயணித்த முஸ்லிம் அரசியல் தலைமைகள் நாட்டிற்கும் சமூகத்திற்கும் ஆற்றிய சேவைகளிலும், சாதித்த விடயங்களிலும் பத்தில் ஒரு பங்கைக்கூட இன, மதத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட தனித்துவக் கட்சிகளின் அடையாளத்தைச் சுமந்து கொண்டிருப்பவர்களால் ஏற்படுத்த முடியவில்லை என்பதே மிகவும் கவலைக்குரிய விடயமாக உள்ளது.
கேள்வி:
இந்த நாட்டிலே சகல இன மக்களும் சமத்துவத்துடனும், ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்ற வகையில், இன நல்லுறவை ஏற்படுத்துவதற்காக முஸ்லிம் சமூகம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:
இந்த நாட்டில் அதிகளவிலான பணத்தைச் செலவிட்டு இன நல்லுறவு சம்பந்தமான நிகழ்ச்சிகளை நடத்தும் சமூகமாக முஸ்லிம் சமூகம் இருந்து வருகின்றது. ஆனால், சுயநல அரசியல்வாதிகளின் விஷக் கருத்துக்களுக்கு ஏமாற்றமடைந்து விடாமல், நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தெளிவாகப் புரிந்துகொண்டவர்களாக, இந்த நாட்டில் ஒரு தாயின் பிள்ளைகளாக வாழும் நாம், வெறுமனே வார்த்தைகளுடன் நின்றுவிடாமல், விட்டுக்கொடுப்புடன் செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் இருக்கின்றேன்.
கேள்வி:
தனித்துவக் கட்சிகளின் வருகைக்குப் பின்னர், தேசிய அரசியலில் இருந்து கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாகச் சிறுபான்மை முஸ்லிம் சமூகம் விலகிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:
தேசிய அரசியலில் கடந்த இரண்டு தசாப்தங்களாக முஸ்லிம்கள், பௌத்தர்கள், தமிழர்கள் சார்ந்த கட்சிகளின் உருவாக்கங்களுக்குப் பின்னரே நாட்டில் இனவாதம் தலைவிரித்தாடத் தொடங்கியது. என்னைப் பொறுத்தமட்டில், இனவாதம் என்பதை போதைப்பொருளைப் போன்ற ஒரு விடயமாகவே நான் பார்க்கின்றேன். அதிகளவில் போதைப்பொருளைப் பயன்படுத்துபவர்கள் பொருளாதாரத்தில் கீழ் மட்டத்தில் இருப்பவர்களே. அதிகளவில் அதனால் அழிந்து செல்லக்கூடிய நிலையைக் கொண்ட சமூகமாகவும் அவர்களை சார்ந்தவர்களே இருப்பதை நாம் பார்க்கின்றோம்.
ஆனால், போதைப்பொருளை உற்பத்தி செய்பவர்களும், வியாபாரம் செய்பவர்களும் பொருளாதாரத்தில் உச்சத்தைத் தொடுவதை கண்கூடாக பார்க்க கூடியதாக உள்ளது. அதைப்போலவே, இனவாதம் என்ற நச்சுப்பொருளை விதைத்து வியாபாரம் செய்யும் அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும், இனங்களுக்கிடையில் பாரிய முறுகல்களையும், சந்தேகங்களையும், அச்சங்களையும் ஏற்படுத்துவதன் மூலம் தங்களுடைய அரசியலில் இலாபம் பெற்றுக்கொள்வதானது வெளிப்படையான உண்மை.
மேலும், இனவாதக் கருத்துக்களை வீர வசனங்களுடன் மேடைகளில் உரையாற்றுபவர்கள், பாராளுமன்றத்திற்குள் கட்சி வேறுபாடுகளின்றி ஒன்றாக அமர்ந்து சகோதரத்துவத்துடன் உணவருந்துவதையும், தேநீர் அருந்துவதையும் பார்க்கின்றோம். இந்த நாடு முன்னேற்றமடைய வேண்டுமென்றால், நாம் அனைவரும் சகல வேறுபாடுகளையும் களைந்து, ஒரே தாயின் மக்கள் என்ற சமத்துவக் கொள்கைக்குள் வரவேண்டிய தேவை இருக்கின்றது.
எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், தனது நாட்டின் பெயர்தான் அவருடைய அடையாளமாக இருக்க வேண்டும். எமது நாடு பின்தங்குவதற்கும், பொருளாதாரத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டுமென்றால், அது நாட்டிலுள்ள சகல இன மக்களினதும் ஒற்றுமையிலேயே தங்கியுள்ளது. இந்த ஒற்றுமையைத் தகர்ப்பதற்காக ஒவ்வொரு பெயர்களில் அமைப்புகளுக்கும் அல்லது ஒவ்வொரு கட்சிகளின் உருவாக்கங்களுக்கும், வெளிநாட்டு நிதியுதவிகளுடன் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை மக்கள் மத்தியிலிருந்து திசை திருப்புவதற்கான சூழ்ச்சிகள் இடம் பெறுகின்றனவா என்ற சந்தேகங்களும் எழத் தொடங்கியுள்ளன.
தனித்துவக் கட்சிகளின் பாரம்பரிய அரசியல் கலாசாரத்திற்குள் அகப்பட்டுக்கொண்ட மக்களாக வாழ்ந்த நாம், பிறந்த காலம் முதல் நாட்டின் சுபீட்சத்திற்கான அர்த்தமுள்ள, தூய்மையான காற்றை இப்பொழுதுதான் சுவாசிக்கக்கூடிய மக்களாக இருக்கின்றோம். இதனை நாம் இலங்கையர்களாக, ஒருமித்த குரலுடன் கைகோர்த்தவர்களாக முன்னோக்கி நகர்த்துவோமானால், சிறந்ததொரு இலங்கையைக் கட்டியெழுப்ப முடியும் என்ற நிலைப்பாட்டில் நான் இருக்கின்றேன்.
கேள்வி:
பழைய அரசியல் கலாசாரம் மற்றும் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய அரசியல் கலாசாரம் பற்றிய உங்களுடைய பார்வை என்ன?
பதில்:
உண்மையாகக் கூறப்போனால், 2024ஆம் ஆண்டு மாற்றத்தை நோக்கிய பயணத்தில் எமது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட அநுர குமார திசாநாயக்க, நாட்டில் உண்மையான (Living Legend) ஒரு மனிதராக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். கடந்த கால பாரம்பரிய அரசியல் கலாசாரத்தில் இருந்த அரசியல்வாதிகளைக் கடந்து, மனித நேயத்தை நேசிக்கக்கூடியதொரு அரசியல் கலாசார மாற்றம் ஏற்பட்டுள்ளமை தெளிவாக உணரப்படுகின்றது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மலையகத்திற்குச் சென்று தோட்டத் தொழிலாளர்களின் கைகளைப் பிடித்துப் பார்த்த விடயமானது, உண்மையில் என்னை உள்ளத்தால் நெகிழவைத்த ஒரு விடயமாகவும், மாற்றத்தை நோக்கிய புதிய அரசியல் கலாசாரத்தின் மீதான நம்பிக்கையாகவும் இருக்கின்றது. அது இலங்கையில் உள்ள மனித நேயமுள்ள அனைத்து மக்களின் உள்ளங்களையும் தொட்ட ஒரு நினைவாகவும் மாறியிருந்தது.
அப்படியான ஓர் எளிமையான, மக்களை மதிக்கக்கூடிய, பெரும்பான்மை மக்களுடன் இணைந்து சிறுபான்மை மக்களையும் அரவணைத்துச் செல்லக்கூடிய நம்பிக்கையான தலைமைத்துவத்தைக் கொண்ட அரசியல் கலாசாரமாகவே புதிய அரசியல் கலாசாரத்தை நான் பார்க்கின்றேன்.
கேள்வி:
தற்போதைய அரசாங்கத்தில் அரசியல் தலையீடுகள் அற்ற நிலையில் நீத்தித்துறையும், பொலிஸ் ஆணைக்குழுவும் சுயாதீனமாக இயங்கத் தொடங்கியுள்ள நிலையில், பாராளுமன்றத்திற்கு உள்ளிருந்தும், வெளியிலிருந்தும் பகிரங்கமாக விமசிக்க தொடங்கியுள்ள எதிர்கட்சி உறுப்பினர்களின் செயற்பாடுகளை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்.?
பதில்:
கடந்த காலங்களுடன் ஒப்பிடுகின்றபோது, தற்காலத்தில் வாழுகின்ற இளம் சமூகத்தினர் தெளிவான முறையில் அறிவுபூர்வமாகச் சிந்திக்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். அதனால்தான் 2024ஆம் ஆண்டில் நாட்டில் அரசியல் மாற்றமும் ஏற்பட்டது.
குறிப்பாக, ஒரு நாடோ, ஒரு வியாபாரமோ அல்லது ஒரு குடும்பமோ நஷ்டத்தில் இருக்கின்றபோது, அதனைப் பொறுப்பேற்றுக்கொள்பவர்கள் ஒரே நேரத்தில் U-Turn எடுத்து அனைத்தையும் சரிசெய்துவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்களானால், அவர்கள் குரளிவித்தை (Magicians) காட்டுபவர்களாகத்தான் இருக்க வேண்டும். அவர்கள் கூட உண்மையாக எதனையும் செய்வதில்லை. அதனால்தான் அவர்களைக் குரளிவித்தைக்காரர்கள் (Magicians) என அழைக்கின்றோம்.
நான் நேர்மையாக வாழ்ந்தவன் என்ற அடிப்படையில், திட்டமிடப்பட்ட சூழ்ச்சிகளிலிருந்து எனக்கு நீதி கிடைத்தது. அந்த வகையில், இப்போது நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றமானது, நாட்டின் நீண்டகாலத் தொலைநோக்கு வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.
அதற்கு இயலுமானவரை ஆதரவு வழங்கக்கூடியவர்கள் தங்களுடைய ஆதரவை அரசாங்கத்திற்கு வழங்கலாம். அதையும் தாண்டி ஆதரவு வழங்க முடியாதவர்கள், அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக கால், கைகளைப் பிடித்து இழுக்கும் விளையாட்டுக்களை ஓரமாக வைத்துவிட்டு, எதிர்காலச் சந்ததியினருக்கான சுபீட்சமான நாட்டைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தொலைநோக்குத் திட்டங்களையும், செயற்பாடுகளையும் அமைதியாக அவதானித்து கொண்டிருப்பதே நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மை அளிக்கும் என்பதை அரசியலுக்கு அப்பால் நின்று நான் முன்வைக்க விரும்புகின்றேன்.
அஹமட் இர்ஷாட்.
தினகரன் வாரமஞ்சரிக்கான நேர்காணல்,
15-11-2026.
අනුර කුමාර ජීවත් වන්නේ සැබෑ මිනිසෙක් (Living Legend ) - ඩොක්ටර් සමඟ සම්මුඛ සාකච්ඡාවක්. ෂාෆි - "සුළුතර ප්රජාව සඳහා, මෙය දැන් පළමු සැබෑ නිදහසයි"
ජාති ආගම් භේදවලින් තොරව සැමට සාමකාමීව, බියෙන් තොරව, සමානාත්මතාවයෙන් හා නිදහසෙන් ජීවත් විය හැකි පරිසරයක් නිර්මාණය කළ අනුර කුමාර දිසානායක ප්රමුඛ ජාතික ජන බලවේගයේ නව දේශපාලන සංස්කෘතිය ශ්රී ලාංකීය පුරවැසියෙකු ලෙස මම පිළිගනිමි.
ජාතිවාදයෙන් හා ආත්මාර්ථකාමී දේශපාලනයෙන් ඔබ්බට ගොස් වාමවාදී චින්තනයෙන් සහ යුක්තිය පිළිබඳ ඉස්ලාමීය මූලධර්මවලින් අවධාරණය කෙරෙන සමානාත්මතාව, මානවවාදය, සහෝදරත්වය සහ දූෂණයෙන් තොර පාලනයක් ඇති කිරීම යුගයේ අවශ්යතාවයයි.
මුස්ලිම් ප්රජාව පටු දේශපාලන අනන්යතා තුළ සිරවී නොසිටිය යුතු අතර ජාතික සමගියට සහ රටේ සංවර්ධනයට වගකීමෙන් සහභාගි විය යුතුය.
+++++++++++++++++++
ප්රශ්නය:
වාමාංශික ජනතා විමුක්ති පෙරමුණේ නායකත්වය යටතේ දශක කිහිපයකට පසු බලයට පත්වී දැනට වසර දෙකක් සම්පූර්ණ කර ඇති වත්මන් ජාතික ජන බලවේගය රජය පිළිබඳ ඔබේ අදහස කුමක්ද?
පිළිතුර:
ශ්රී ලාංකීය පුරවැසියෙකු ලෙසත් වසර පනහක් මේ රටේ ජීවත් වූ අයෙකු ලෙසත් ඔබගේ ප්රශ්නයට පිළිතුරු දීමට මම කැමැත්තෙමි.
එනම් මේ රටේ බලය මාරු වූ දා සිට විශේෂයෙන් සුළු ජාතික ප්රජාවන් පසුගිය දෙවසර තුළ කිසිදු ආකාරයක ජාතිවාදයකින් තොර සාමකාමී ජීවිතයක් අත්විඳින බව ය.
මා සම්බන්ධයෙන් ගත් කල, සුළු ජාතික ප්රජාවන්ට පූර්ණ නිදහස ලැබී ඇත්තේ මේ වන විට බව මම තරයේ විශ්වාස කරමි. එක යුක්තිය සහ එකම නීතිය යන මූලධර්මය මත සෑම කෙනෙකුටම සමාන ශ්රී ලාංකිකයන් ලෙස ජීවත් විය හැකි තත්ත්වයක් නිර්මාණය වී තිබේ.
පසුගිය කාලයේ ජාතිවාදී අදහස් ජනතාව මත පැටවූයේ කවුරුන්ද, ඔවුන් ඔවුන්ගෙන් ලබා ගත් දේශපාලන වාසි මොනවාද යන්න සෘජුවම දුටු සමාජයක් ලෙස අපි ජීවත් වෙමු.
පළමුව, තමා හෝ ශ්රී ලාංකිකයෙකු ලෙස සිතන පුද්ගලයෙකු තමා හෝ ඇය අයත් වන ප්රජාවට සැබවින්ම ආදරය කරයි. ඒ අර්ථයෙන් හෘදය සාක්ෂියට එකඟව දේශපාලන භේදවලින් ඔබ්බට කල්පනා කරන විට, ආර්ථිකය, සංස්කෘතිය, ආගම, වෙළෙඳ, නීතිමය කටයුතු සම්බන්ධයෙන් තම සුවිශේෂත්වය රැක ගනිමින් සාමකාමීව, නිදහසේ, ස්වාධීනව ජීවත් විය හැකි තත්ත්වයක් අනුර කුමාර දිසානායක ප්රමුඛ ජාතික ජනබල ආණ්ඩුව යටතේ මේ දෙවසරක පාලන කාලය තුළ නිර්මාණය වී තිබේ.
ප්රශ්නය:
NPP ආණ්ඩුවේ මුස්ලිම් අයට ඇමතිකම් දුන්නේ නැහැ, කතානායක ධූරය රිෂ්වි සාලිට දුන්නේ නැහැ, කල්මුණේ උතුර රෝහලේ සේවිකාවන්ගේ ඇඳුම් පැළඳුම් ප්රශ්නය ප්රශ්නයක් විදියට සලකනවා, NPP ආණ්ඩුවත් මේ රටේ මුස්ලිම් ප්රජාවට එරෙහිව පක්ෂග්රාහී, ජාතිවාදී ක්රියාවල නිරත වන බවට විපක්ෂයේ මුස්ලිම් දේශපාලනඥයන් කරන චෝදනා ඔබ දකින්නේ කොහොමද? මුස්ලිම් ප්රජාව විසින් ගරු කරනවාද?
පිළිතුර:
මේ වන විට ශ්රී ලාංකික පුරවැසියන් ලෙස මුස්ලිම් ජනතාව සාමකාමී ජීවිතයක් ගත කරති. 2019 වර්ෂයේ බලය උච්චතම අවස්ථාව වන විට, කුමන්ත්රණයකින් විපතට පත් පවුලක් ලෙස හෝ විස්තර කළ නොහැකි දුක් විඳීමට ලක්වූවෙකු ලෙස මම පුද්ගලිකව එය අත්විඳිමි. ඒ වෙලාවේ මොන පක්ෂයේ හිටියත්, මුස්ලිම් ප්රජාව නියෝජනය කරන මන්ත්රීවරු 20කට වඩා හිටියත්, ආණ්ඩුව පැත්තේ ඇමැතිකම් දැරුවත් ඒ අයට වගකීමක් සහ යුතුකමක් තියෙනවා හදවතට අත තියාගෙන කතා කරන්න.
සැමට සමාන සාධාරණත්වය, සැමට සමාන තැන, සැමට රටක් යන අදහස ඇතිව සැමට සාමකාමීව ජීවත් විය හැකි පරිසරයක් නිර්මාණය වී ඇති තත්ත්වයක් තුළ මුස්ලිම් ප්රජාවට අමාත්ය ධුර, දේශපාලන බලය සම්බන්ධයෙන් එල්ල වන විවේචන දෙස බලන විට මට පෙනී යන්නේ ඒවා බොරු ප්රශ්නයක් ලෙසයි. මම එය සලකන්නේ පැරණි දේශපාලන සංස්කෘතිය යළි පණ ගැන්වීම සහ දුර්වල දේශපාලනය හරහා මුස්ලිම් ප්රජාව පසෙකට තල්ලු කර යම් කණ්ඩායමකට පමණක් බලය රඳවා ගැනීමේ වැඩපිළිවෙළක් ලෙසයි.
මෙවැනි අදහස් හා විවේචන ඉදිරිපත් කරන අයගේ අතීත දේශපාලන ජීවිතය දෙස බැලුවහොත් ඔවුන් තම පෞද්ගලික අපේක්ෂාවන් ඉටුකර ගැනීම සඳහා මුස්ලිම් සමාජය බිල්ලට දුන් ආත්මාර්ථකාමී පුද්ගලයන් යැයි කීමෙහි වරදක් නැතැයි මම විශ්වාස කරමි. එබැවින් වත්මන් ජාතික ජන බලවේගය රජයට මා බෙහෙවින් ප්රශංසා කරන අතරම මගේ අදහස නම් ආත්මාර්ථකාමී හේතූන් මත රජය විවේචනය කරන්නන් දැනුවත් සමාජයක සාමාජිකයන් ලෙස වගකීමෙන් කටයුතු කළ යුතු බවයි.
මේ පාලනය යටතේ අපි සාමකාමීව ජීවත් වෙනවා; අපගේ ආගමික වතාවත් සහ සංස්කෘතික කටයුතු කිසිඳු ගැටලුවකින් තොරව කරගෙන යාමට හැකිදැයි ඔබ කාගෙන් හෝ ඇසුවොත් ඔවුන් සතුටින් ප්රකාශ කර ජාතික ජන බලවේගයේ දෙවසරක පාලනය ගැන සුබවාදී අදහස් පමණි. පිළිගත්, හින්දු, මුස්ලිම්, ක්රිස්තියානීන් යන සියලු දෙනාටම සමාන වන, කිසිවකුට වඩා උසස් යැයි නොසලකන තත්ත්වයක් නිර්මාණය වී, සැමට සමානාත්මතාවයෙන් ජීවත් විය හැකි පරිසරයක් ගොඩනැගී ඇත.
ඒ නිසා කල්මුණේ උතුරේ රෝහලේ ඇඳුම් පැළඳුම් ප්රශ්න හෝ රැකියා අවස්ථා ලබා දීම මෙම දේශපාලන අරමුණු වෙනුවෙන් සාකච්ඡා කිරීමටත්, ජනතා අධ්යාපනයට පහසු විෂයක් බවට පත් වෙනවා.
කෙසේ වෙතත් මේ රටේ දේශපාලන ක්රමයට අනුගතව ක්රියා කරන කොටස්කරුවන් ලෙස හෝ මේ රටේ සිදුවී ඇති වෙනස්කම් පිළිගෙන ක්රියාකරන්නන් ලෙස සමාජය ගැන දූරදර්ශීව සිතන සියලු දෙනාම අත්වැල් බැඳගෙන එකමුතුව ඉදිරියට ගියොත් පමණයි අනාගතයේ සියලු ජනවාර්ගික ජනතාවට ජීවත්විය හැකි සෞභාග්යවත් ස්ථාවර ශ්රී ලංකාවක් ගොඩනැගිය හැක්කේ.
ප්රශ්නය:
2024 ආණ්ඩු පෙරළියේදී උතුරු-නැගෙනහිර සහ උතුරු-නැගෙනහිරෙන් පිටත වෙසෙන සුළුතර මුස්ලිම් ජනතාවගෙන් සැලකිය යුතු පිරිසක් ජාතික ජන බලයට ඡන්දය දී රජයට සහාය දැක්වූහ. මේ වන විට ආණ්ඩුකරණයේ වසර දෙකක් සම්පූර්ණ වී ඇති බැවින්, රජය තවදුරටත් ශක්තිමත් කිරීමට සහ අනාගතයේදී මේ රට ගොඩනැගීමට උපකාර කිරීමට සුළු ජාතික මුස්ලිම් ප්රජාව කළ යුතු මුලපිරීම් මොනවාද?
පිළිතුර:
මේ රටේ ජනතාවට දේශපාලනය තුළින් සම්පූර්ණ ප්රතිලාභ ලබා ගත හැකි විය යුතුයි. උදාහරණයක් විදියට ගත්තොත් වෛද්ය සේවාවන් ගත්තොත් ඒවායින් වැඩි ප්රතිලාභ ලබන්න ඕන මේ රටේ රෝගීන්. රටේ දේශපාලන ක්රමය හරහා හෝ බලය බෙදීමෙන් රටේ ජනතාවට වැඩි ප්රතිලාභයක් ලැබිය නොහැකි තත්ත්වයක් තිබේ නම්, එම රටට දේශපාලනය කියා දෙයක් කිසිසේත්ම අවශ්ය නොවේ.
එහෙම බලනකොට අපි ආපු ගමන් මඟ දිහා ආපහු හැරිලා බැලුවොත් සුළු ජාතික ප් රජාවක් විදියට අපිට සාමකාමීව, නිස්කලංකව ජීවත් වෙන්න පුළුවන් තත්ත්වයකට දැන් අපි පත්වෙලා ඉන්නේ.
මේ දේශපාලන තත්ත්වය තවදුරටත් ආරක්ෂා කර ගැනීමේ ප්රධාන වගකීමක් මුස්ලිම් සුළුතර ප්රජාවට තිබෙන බව මම දකිනවා. අතීතයේ පැවති සාම්ප්රදායික දේශපාලන සංස්කෘතිය යටතේ දේශපාලනයේ නිරත වූවන් ඔවුන් පිටුපසින් සිට ඔවුන්ව හුරතල් කළ පිරිස් සමඟ එක්ව ජනතාව නොමග යැවීමේ උත්සාහයක නිරත වීමට පටන් ගෙන තිබේ.
මේ රජය ජනතාවට ලබාදුන් සෞභාග්යවත් සාමකාමී ජීවිතයට එරෙහිව ගෙන යන කුමන්ත්රණ සහ සැඟවුණු සැලැසුම් සියල්ල අසාර්ථක වී අවසන් වී සත්ය හෙළිදරව් වීමට පටන් ගෙන ඇති බව අපි පැහැදිලිව සහ විවෘතව දකිමින් සිටිමු.
අප සියලු දෙනාම අපේක්ෂා කරන පරිදි රට දියුණු වීමට නම්, රජය දැනට ගෙන යන වැඩපිළිවෙළ සහ ප්රතිසංස්කරණ තවදුරටත් ශක්තිමත් කිරීමටත්, නීතියේ ආධිපත්යය ස්ථාපිත කිරීමටත් සුළු ජාතික මුස්ලිම් ප්රජාව දේශපාලන භේදවලින් තොරව එකාවන්ව එක හඬින් අනුර කුමාර දිසානායක ජනාධිපතිතුමා ප්රමුඛ ජාතික ජන බලවේගය රජය සමඟ අත්වැල් බැඳ ගැනීම යුගයේ කාලීන අවශ්යතාවක් බව මගේ අදහසයි.
ප්රශ්නය:
සමානාත්මතාවය, සමාන අයිතිවාසිකම්, සාමකාමී ජීවිතය සහ සහෝදරවරු යන වචන වාමාංශික මතවාදයේ වැදගත් කාර්යභාරයක් ඉටු කරනවා සේම, ඉස්ලාමයේ ද සමානාත්මතාවය, වාර්ගික සහජීවනය, සාමකාමී ජීවන රටාව සහ මුහම්මද් නබිතුමාගේ ආධාරකරුවන් ලෙස සිටි සුෆ්ෆා සහචරයින් පිළිබඳ සැබෑ මූලධර්ම අඩංගු වේ. ලෞකික අධ්යාපනය සහ අධ්යාත්මික ජීවිතය යන දෙකෙහිම සාර්ථක වූ සහ ඒ දෙකෙහිම ගැඹුරින් නියැලී සිටින කෙනෙකු වශයෙන්, ඔබ මෙය දකින්නේ කෙසේද?
පිළිතුර:
අවිද්යාවේ යුගයේ සමාජයට එරෙහිව, මුහම්මද් නබිතුමාගේ කාලයේ ඉස්ලාම් දහම ජනතාව අතරට ගෙන ඒම සඳහා මුහම්මද් නබිතුමා සමඟ උරෙන් උර ගැටී සිටි සෆ්ෆා සහචරයන් ගැන ගැඹුරින් සිතන විට, යමෙකු අසාධාරණයක් කිරීමට හෝ අසාධාරණයක් කිරීමට උත්සාහ කරන්නේ නම්, දක්ෂිණාංශික හා යුක්තිය ඉක්මවූ වාමාංශික පක්ෂවලට අසාධාරණයක් කළ යුතුය යන විශ්වාසය ඇතිව අල්ලාහ්ව විශ්වාස කරන මුස්ලිම් සමාජය ජීවත් වේ. මෙය සාමාන්යයෙන් සියලුම ආගම්වලද අවධාරණය කර ඇති කරුණකි.
එම පදනම මත ඔබ කියූ පරිදි වාමාංශික පක්ෂයේ ප්රතිපත්ති තුළ ඉස්ලාමීය චින්තනය, නොදිරන බව, අයුක්තියෙන් තොර යුක්තිය, සමානාත්මතාවය වැනි මූලධර්ම අන්තර්ගත වන බව පැහැදිලිවම පෙනී යයි. මේ සියල්ල මේ රටේ ස්ථිරව පැවතිය යුතු බව කිසිදු සැකයකින් තොරව අපගේ පැතුම ද වේ.
ප්රශ්නය:
නිදහසින් පසු ජාතික පක්ෂ සමඟ එක්ව ගමන් කළ මුස්ලිම් නායකත්වයන් සහ 1980 දශකයේ අගභාගයේදී විවිධ මුස්ලිම් පක්ෂ බිහිවීම අතර වෙනස ඔබ දකින්නේ කෙසේද?
පිළිතුර:
නිදහසින් පසු ඇති වූ භාෂා දේශපාලනය, තිස් අවුරුදු යුද්ධයෙන් ඇති වූ කැළැල්, උතුරෙන් මුස්ලිම් ජනතාව පලවා හැරීම වැනි සාධක මත දිවංගත එම්.එච්.එම්. අෂ්රොෆ් ශ්රී ලංකා මුස්ලිම් කොංග්රසය ස්ථාපිත කළේ මුස්ලිම් ජනතාවට වෙනම පක්ෂයක් ලෙසය. ශ්රී ලංකාවේ සන්දර්භය තුළ, මුස්ලිම් කොංග්රසය පිහිටවූ අෂ්රොෆ් විසින්ම අවසානයේ තේරුම් ගත්තේ එකම මාතෘභූමියක් ලෙස සියලු දෙනාම එකමුතුව ජීවත් වීමට නම්, මුස්ලිම්වරුන්ට වෙනම නම් ඇති පක්ෂ, හෝ වාර්ගික හෝ ආගම පිළිබිඹු කරන නම් ඇති පක්ෂ, භේදයක් හා අනතුරක් පමණක් ඇති කරන බවත්, වෙනත් කිසිවක් කළ නොහැකි බවත්ය.
ඔහු මිය යාමට පෙර සිටම ජාතික සමගි සන්ධානය (NUA) පිහිටුවා තිබුණේ එබැවිනි. මුස්ලිම් නායකයන් යැයි කියා ගන්නා දේශපාලඥයන් අදටත් ඔවුන් යන යන තැන තම දේශපාලන සංකේතය ලෙස අභාවප්රාප්ත අෂ්රොෆ් මහතාගේ ඡායාරුපය භාවිත කරන අයුරු දක්නට ලැබේ. වත්මන් දේශපාලනඥයන් දිවංගත අෂ්රොෆ් මහතාගේ ප්රතිපත්තිවලට හා අදහස්වලට සැබෑ ලෙසම ගරු කළේ නම්, ඔවුන් කිසිවිටෙකත් මුස්ලිම් ප්රජාව වෙනම මුස්ලිම් පක්ෂවල නම් තබා ගනිමින් ජාතික දේශපාලනයෙන් සහ සහෝදර ප්රජාවන්ගෙන් බෙදීමේ දේශපාලනයක් සිදු නොකරනු ඇත.
ආගමික පදනමින් මුස්ලිම්වරුන් සඳහා වෙනම පක්ෂ බිහිවීමේ ප්රතිඵලයක් ලෙස බහුතර ජනතාව අතර ප්රශ්නය ද මතු වීමට පටන් ගනී: මුස්ලිම්වරුන්ට වෙනම පක්ෂයක් තිබේ නම්, බෞද්ධයන් සඳහා වෙනම පක්ෂයක් නොතිබිය යුත්තේ මන්ද? වාර්ගික හෝ ආගමික නම් ඇති පක්ෂ නිර්මාණය කිරීමේ අරමුණ උචිත විය හැකි වුවද, ඒවා ප්රායෝගිකව සෑම අතින්ම නුසුදුසු යැයි මම සලකමි. ඒ අතරම එවැනි පක්ෂ පැවතීමත් බෙදුම්වාදයට අනුබල දෙන බව මගේ අදහසයි.
අදටත් ආගමේ හෝ ජාතියේ නාමයෙන් නිර්මාණය වූ වෙනම පක්ෂ පවත්වාගෙන යාමට හේතුව සලකා බැලීමේදී එය තමන්ගේ අභිලාෂයන් මුදුන් පමුණුවා ගැනීමට උත්සාහ කරන දේශපාලනඥයන් මිස අන් කිසිවක් විය නොහැක. ඒ නිසා මේ රටේ සාමාන්ය පුරවැසියෙකු ලෙසත්, ජාතියේ ඒකීය භාවයත් සැලකිල්ලට ගනිමින් ආගමික අනන්යතාවක් ඇතිව ක්රියාත්මක වන පක්ෂ සම්පූර්ණයෙන්ම අහෝසි කළ යුතුයි කියන ස්ථාවරයේ මම ඉන්නවා.
තවද, පසුගිය කාලයේ ජාතික දේශපාලනයේ ප්රධාන පක්ෂ සමඟ පෙළ ගැසුණු මුස්ලිම් දේශපාලන නායකත්වයන්ට ජාතිය හා ආගමේ නාමයෙන් බිහි වූ වෙනම පක්ෂවල අනන්යතාවය දරන්නන් විසින් රටට සහ ප්රජාවට කරන ලද සේවයෙන් දසයෙන් එකක් හෝ ඉටු කර ගැනීමට නොහැකි වීම බලවත් කණගාටුවකි.
ප්රශ්නය:
මේ රටේ සියලුම ජනවර්ගවලට සමානාත්මතාවයෙන් හා සමගියෙන් ජීවත්වීමට හැකිවන පරිදි වාර්ගික සහජීවනය ඇති කිරීමට මුස්ලිම් ප්රජාව ගතයුතු ක්රියාමාර්ග ඔබ දකින්නේ කෙසේද?
පිළිතුර:
මුස්ලිම් ප්රජාව මේ රටේ වාර්ගික සහජීවනයට අදාළ උත්සව පවත්වන්න විශාල මුදලක් වැය කරන ප්රජාවක්. කෙසේ වෙතත්, ආත්මාර්ථකාමී දේශපාලකයන්ගේ විෂ සහිත අදහස්වලට නොරැවටී, මේ රටේ සිදුවී ඇති වෙනස්කම් හොඳින් වටහාගත් මිනිසුන් ලෙස එක මවකගේ දරුවන් ලෙස මේ රටේ ජීවත්වන අප වචනයෙන් පමණක් නොනැවතී සම්මුතිවාදී සිතින් කටයුතු කළ යුතු බව මගේ අදහසයි.
ප්රශ්නය:
අනන්යතාවය පදනම් කරගත් පක්ෂ බිහිවීමෙන් පසු සුළු ජාතික මුස්ලිම් ප්රජාව පසුගිය දශක දෙකකට වැඩි කාලයක සිට ජාතික දේශපාලනයෙන් ඈත් වෙමින් තිබේ. ඔබ මෙය දකින්නේ කෙසේද?
පිළිතුර:
ජාතික දේශපාලනයේ දී පසුගිය දශක දෙක තුළ මුස්ලිම්, බෞද්ධ, දෙමළ යන මූලිකත්වයෙන් පක්ෂ පිහිටුවීමෙන් පසුවයි වාර්ගික අන්තවාදය රට තුළ හිස ඔසවන්නට පටන් ගත්තේ. මා සම්බන්ධයෙන් ගත් කල, වාර්ගික අන්තවාදය මත්ද්රව්ය වැනි දෙයක් ලෙස මම දකිමි. විශාල වශයෙන් මත්ද්රව්ය භාවිත කරන අය බොහෝ විට ආර්ථික පරිමාණයේ පහළ අන්තයේ සිටින අයයි. එයින් විනාශ වීමට බොහෝ දුරට ඉඩ ඇති ප්රජාවන් ඔවුන් හා සම්බන්ධ වූවන් බව ද අපට පෙනේ.
කෙසේ වෙතත්, මත්කුඩු නිෂ්පාදනය කරන සහ වෙළඳාම් කරන අය ධනයේ හිනිපෙත්තට ළඟා වන බව පැහැදිලිව පෙනේ. එසේ ම ජාතිවාදය නමැති විෂ ද්රව්ය වපුරන සහ වෙළෙඳාම් කරන දේශපාලනඥයන් සහ ක්රියාකාරීන් ජනවාර්ගික කණ්ඩායම් අතර ප්රධාන ආතතීන්, සැකයන් සහ බිය ඇති කර දේශපාලනික වශයෙන් ලාභ ලබන බව විවෘත සත්යයකි.
ඒ විතරක් නෙවෙයි ජාතිවාදී අදහස් ගැන ගිනි පුපුරු ගහමින් වේදිකා වල කතා කරන අය පක්ෂ භේදයකින් තොරව පාර්ලිමේන්තුවේ එකට ඉඳගෙන සහෝදර සමගියෙන් කන බොන හැටිත් අපිට පේනවා. මේ රට දියුණු වෙන්න නම් අපි හැමෝම සියලු භේද පසෙකලා එක මවකගේ දරුවන් ලෙස සමානාත්මතාවයේ ප්රතිපත්තියට පැමිණිය යුතුයි.
කුමන ජනවාර්ගික කණ්ඩායමකට අයත් වුවද, කෙනෙකුගේ රටේ නම කෙනෙකුගේ අනන්යතාවය විය යුතුය. අපේ රටේ පසුගාමීත්වයට සහ රට මුහුණ දෙන ආර්ථික ගැටලුවලට විසඳුම් සොයන්නට නම්, එය රටේ සියලු ජනතාවගේ එකමුතුකම මත රඳා පවතී. මේ සමගිය බිඳීම සඳහා විවිධ නම් දරන සංවිධාන හෝ පක්ෂ හරහා විදේශ මූල්ය ආධාර ඇතිව රටේ ඇතිවී තිබෙන වෙනස ජනතාවගෙන් ඈත් කිරීමේ වැඩපිළිවෙළවල් ක්රියාත්මක වේද යන සැකය මතුවන්නට පටන්ගෙන තිබේ.
බෙදුම්වාදී පක්ෂවල සාම්ප්රදායික දේශපාලන සංස්කෘතිය තුළ සිරවී සිටින මිනිසුන් ලෙස ජීවත් වූ අපට දැන් උපතින් පසු ප්රථම වතාවට රටට සෞභාග්යයේ අර්ථවත්, පිවිතුරු වාතය ආශ්වාස කිරීමට හැකි වී ඇත. ශ්රී ලාංකිකයන් වශයෙන් අපි එක හඬින් අත්වැල් බැඳගෙන ඉදිරියට ගියොත් යහපත් ශ්රී ලංකාවක් ගොඩනැගිය හැකි බව මගේ අදහසයි.
ප්රශ්නය:
පැරණි දේශපාලන සංස්කෘතිය සහ ස්ථාපිත වී ඇති නව දේශපාලන සංස්කෘතිය පිළිබඳ ඔබේ අදහස කුමක්ද?
පිළිතුර:
අවංකව කතා කළොත් 2024 වෙනසක් කරා යන ගමනේ දී අපේ ජනාධිපතිතුමා ලෙස තේරී පත් වූ අනුර කුමාර දිසානායක මහතා සැබෑ ජීවමාන පුරාවෘත්තයක් ලෙස රට තුළ ජීවත් වෙනවා. අතීතයේ පැවති සාම්ප්රදායික දේශපාලන සංස්කෘතියේ දේශපාලකයන්ට ඔබ්බෙන් මනුෂ්යත්වයට ආදරය කළ හැකි දේශපාලන සංස්කෘතියක් දෙසට වෙනසක් සිදුවී ඇති බව පැහැදිලිවම දැනේ.
අනුර කුමාර දිසානායක ජනාධිපතිතුමා කඳුකරයට ගොස් වතු කම්කරුවන්ගේ දෑත් අල්ලාගෙන සිටීම ඇත්ත වශයෙන්ම මා තුළ ගැඹුරින් සසල කළ සහ වෙනසක් සඳහා නැඹුරු වූ නව දේශපාලන සංස්කෘතියක් කෙරෙහි විශ්වාසය ඇති කළ දෙයකි. එය ශ්රී ලංකාවේ සියලු මානව හිතවාදී මිනිසුන්ගේ හදවත් සසල කළ මතකයක් බවට ද පත් විය.
නව දේශපාලන. සංස්කෘතිය එවැනි සරල, ගෞරවනීය සහ විශ්වාසදායක නායකත්වයක් ලෙස මම දකිමි - බහුතර ප්රජාව සමඟ එකට වැඩ කළ හැකි අතරම සුළුතර ප්රජාවන් ද වැළඳ ගත හැකිය.
ප්රශ්නය:
වත්මන් රජය යටතේ අධිකරණය සහ පොලිස් කොමිසම දේශපාලන මැදිහත්වීම්වලින් තොරව ස්වාධීනව කටයුතු කිරීමට පටන් ගෙන ඇති අවස්ථාවක පාර්ලිමේන්තුව තුළත් ඉන් පිටතත් විවෘතව විවේචනය කිරීමට පටන් ගෙන ඇති විපක්ෂයේ මන්ත්රීවරුන්ගේ ක්රියා කලාපය ඔබ දකින්නේ කෙසේද?
පිළිතුර:
අතීත කාලපරිච්ඡේද හා සසඳන විට අද ජීවත්වන තරුණ තරුණියන්ට පැහැදිලිව සහ බුද්ධිමත්ව සිතීමට හැකියාව ඇත. ඒ නිසා තමයි 2024 දී රටේ දේශපාලන වෙනසක් ඇති වුණේ.
විශේෂයෙන්ම ජාතියක්, ව්යාපාරයක්, පවුලක් පාඩුවෙ ඉන්නකොට ඒකෙ වගකීම ගන්න අය එකපාරටම U-turn එකක් දාලා හැමදේම හරිගස්සන්න බලාපොරොත්තු වෙනවා නම් ඒ අය මැජික්කාරයෝ වෙන්න ඕන. ඔවුන් පවා ඇත්ත වශයෙන්ම කිසිවක් නොකරයි. ඒ නිසා අපි ඔවුන්ව මැජික්කාරයන් ලෙස හඳුන්වමු.
මම අවංකව ජීවත් වූ පදනම මත, සැලසුම් කළ කුමන්ත්රණවලින් මට සාධාරණයක් ලැබුණා. ඒ අනුව බලන විට දැන් රට තුළ ඇති කර ඇති වෙනස ජාතියේ දිගුකාලීන, දූරදර්ශී සාර්ථකත්වය කරා ගමන් කරමින් තිබේ.
රජයට සහය දීමට හැකි අය හැකි පමණින් එය කළ යුතුයි. එතනින් එහාට සහයෝගයක් දෙන්න බැරි උදවිය ආණ්ඩුවේ වැඩවලට එරෙහිව පොඩි පොඩි බාධා කිරීම් කරනවා වෙනුවට මේ වගේ අත පය අදින සෙල්ලම් පැත්තකට දාලා, අනුර කුමාර දිසානායක ජනාධිපතිතුමා ප්රමුඛ ජාතික ජන බලවේගයේ දීර්ඝ කාලීන සැලසුම් සහ ක්රියාදාමයන් නිහඬව නිරීක්ෂණය කරමින් අනාගත පරපුරක් ගොඩනගා ගැනීමට කටයුතු කරනවා නම් හොඳයි. මෙය රටට සහ ජනතාවට ප්රයෝජනවත් වන බව දේශපාලනයෙන් බැහැර ස්ථාවරයක සිට ප්රකාශ කිරීමට කැමැත්තෙමි.
අහමඩ් ඉර්ෂාඩ්.
දිනකරන් වරමංජරි සඳහා සම්මුඛ සාකච්ඡාව,
15-11-2026.
සිංහල පරිවර්තනය සමග) அநுர குமார உண்மையான மனிதனாக வாழ்கின்றார்(Living Legend) -மருத்துவர் ஷாபி நேர்காணல்- "சிறுபான்மை சமூகத்திற்கு இப்போதுதான் உண்மையான சுதந்திரம்"
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 15, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 15, 2026
Rating:


கருத்துகள் இல்லை: