காத்தான்குடி மீடியா போரத்தின் வடமாகாண விஜயத்தின் போது உறுதுணையாக இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் M.K.சிவாஜிலிங்கம் அவர்களின் மறைவு பெரும் இழப்பு
காத்தான்குடி மீடியா போரத்தின் வடமாகாண விஜயத்தின் போது எமக்கு மிகவும் உறுதுணையாக இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் M.K.சிவாஜிலிங்கம் அவர்களின் மறைவு பெரும் இழப்பு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய வல்வெட்டித் துறை நகர சபையின் தவிசாளருமான M.K.சிவாஜிலிங்கம் அவர்களின் மறைவுச்செய்தி எங்கள் காதுகளை எட்டிய போது நாங்கள் பெரும் துயரமடைந்தோம்.
குறிப்பாக அவர் அரசியல் தலைவராக தான் சார்ந்த மக்களுக்கு தைரியத்துடன் பணியாற்றிய ஒரு தலைவர் என்பதோடு மாத்திரமல்லாது இன நல்லுறவுக்காகவும் பெரிதும் உழைத்த ஒரு முன்னணி மனிதர் ஆவார். குறிப்பாக சிறுபான்மையின மக்கள் ஒற்றுமையாக வடகிழக்கில் வாழ வேண்டும் என்பதை பெரிதும் வலியுறுத்திய ஒரு தலைவராவார்.
குறிப்பாக யுத்தத்துக்கு பின்னராக வடமாகாண நிலவரம் தொடர்பில் அறிந்து கொள்ள காத்தான்குடி மீடியா போரம் வட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்தது. இந்த விஜயத்தின் போது எங்களுக்கு பல்வேறு வழிகளிலும் சகல விதமான ஒத்துழைப்புகளையும் உதவிகளையும் வழங்கி எங்களுடைய அந்த விஜயம் மிகவும் வெற்றிகரமாக அமைய பெரிதும் எங்களுக்கு உதவி செய்த ஒருவராக M.K.சிவாஜிலிங்கம் அவர்களை நாங்கள் எப்போதும் நினைவு கூறுகின்றோம்.
அவ் விஜயத்தின் போது அப்போதைய வடமாகாண முதலமைச்சர் ஓய்வு பெற்ற நீதியரசர் C.V.விக்னேஸ்வரன் அவர்களைசந்திப்பதற்கு முழு ஏற்பாடுகளையும் M.K.சிவாஜிலிங்கம் அவர்களே ஏற்படுத்தி தந்தார். இந்த சந்திப்பின் ஊடாக நாங்கள் அப்போதைய முதலமைச்சரின் நேர்காணலை மேற்கொள்ள முடிந்ததோடு அதன் மூலமாக பல்வேறு நல்ல விடயங்களை இந்த சமூகத்துக்கு கொண்டு சேர்க்க முடிந்தது.
அவரின் இந்த உயரிய உதவிகளை காத்தான்குடி மீடியா போரம் எப்போதும் நினைவு கூறுவதோடு, அவரின் இழப்பினால் பெரிதும் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருடனும் நாங்களும் இம்மீளாத்துயரில் பங்கெடுக்கின்றோம்.
இவ்வண்ணம்,
தலைவர்/செயலாளர்,
காத்தான்குடி மீடியா போரம்.
காத்தான்குடி மீடியா போரத்தின் வடமாகாண விஜயத்தின் போது உறுதுணையாக இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் M.K.சிவாஜிலிங்கம் அவர்களின் மறைவு பெரும் இழப்பு
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 15, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 15, 2026
Rating:


கருத்துகள் இல்லை: