ரஷ்யாவிற்கு செல்ல விரும்பும் பாதுகாப்பு படையினர் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர்
பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி பெற்ற பின்னரே ரஷ்யாவிற்கு செல்ல விரும்பும் பாதுகாப்பு படையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு விசா வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்
தனது உத்தியோகபூர்வ X கணக்கில் இட்ட பதிவிலே அவர் இதனை தெரிவித்தார்
இதேவேளை இன்று கொழும்பில் ரஷ்ய தூதுவர் Levan S. Dzhagaryan உடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னரும் அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்
இது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுப்பதற்காக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ரஷ்யாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவிற்கு செல்ல விரும்பும் பாதுகாப்பு படையினர் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர்
Reviewed by www.lankanvoice.lk
on
மே 29, 2024
Rating:

கருத்துகள் இல்லை: