Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

பாராளுமன்ற சிறப்புரிமையா? சுயநல அரசியல் மேடையா?


 
சர்வதேச விவகாரங்களை உள்நாட்டு அரசியலுக்காகவும், மத உணர்வுகளைத் தூண்டுவதற்காகவும் பயன்படுத்துவது நியாயமான அரசியல் அணுகுமுறையாகாது.

இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் மீண்டும் உயிரூட்டும் முயற்சிகளை முறியடிப்பதோடு, புதிய அரசியல் கலாசாரத்தைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பு!

சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகள் என்பது அடையாள அரசியலால் அல்ல, மாறக, நாட்டின் சமமான வாய்ப்புகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியினாலேயே பாதுகாக்கப்பட வேண்டும்.

ஒரு நாட்டின் அரசியல் மாற்றம் என்பது ஆட்சியாளர்களை மாற்றுவதுடன் முடிந்துவிடுவதில்லை. மாறாக, அந்த நாட்டின் அரசியல் சிந்தனை, சமூக அணுகுமுறை, இனங்களுக்கிடையிலான உறவுகள் மற்றும் மக்களின் எதிர்காலம் குறித்த நம்பிக்கைகளிலும் மாற்றம் ஏற்பட வேண்டும். கடந்த பல தசாப்தங்களாக இனவாதம், மதவாதம், சமூகப் பிளவுகள் மற்றும் அதிகாரப் போட்டிகளுக்குள் சிக்கியிருந்த இலங்கை, 2024ஆம் ஆண்டு மக்கள் வழங்கிய வரலாற்று ஆணையின் மூலம் புதிய அரசியல் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்துவரும் இந்த மாற்றத்தைப் பலப்படுத்துவதற்குப் பதிலாக, மீண்டும் பழைய அரசியல் கலாசாரத்திற்குள் நாட்டை இழுத்துச் செல்லும் சில அரசியல் தலைமைகளின் அண்மைக்கால நடவடிக்கைகள் கவலைக்குரியவையாக மாறியுள்ளன.

குறிப்பாக, சிறுபான்மை சமூகங்களின் உணர்வுகளை அரசியல் மூலதனமாகப் பயன்படுத்தி, பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை மக்களுக்கிடையில் சந்தேகங்களையும் முரண்பாடுகளையும் உருவாக்கும் அரசியல் அணுகுமுறைகள் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளன. இதற்கு அண்மைக்கால உதாரணமாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்களையும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் விவாதங்களையும் குறிப்பிட முடியும்.


பாலஸ்தீன மக்களின் துயரங்களையும், மத்திய கிழக்கில் நிலவும் மனிதாபிமான நெருக்கடிகளையும் முன்வைத்து அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கையை விமர்சிப்பதற்கு எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் ஜனநாயக உரிமை உண்டு. பாலஸ்தீன மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் இலங்கையர்கள் அனைவரும் மனிதாபிமான அடிப்படையில் ஒன்றிணைய வேண்டும். ஆனால், அந்த சர்வதேசப் பிரச்சினைகளை உள்நாட்டு இன அரசியலுடன் தொடர்புபடுத்தி, அரசாங்கம் குறிப்பிட்ட மதத்திற்கோ சமூகத்திற்கோ எதிராகச் செயற்படுவதாகத் தோற்றமளிக்கும் வகையில் கருத்துக்களை முன்வைப்பது பொறுப்பான அரசியலாக அமையுமா என்பதே இங்கு எழுகின்ற முக்கியமான கேள்வியாகும்.

குறிப்பாக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் இஸ்ரேலுக்கு ஆதரவாகச் செயற்படுவதுடன் ஈரானுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக ரவூப் ஹக்கீம் முன்வைத்த விமர்சனம் அரசியல் ரீதியாகப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கு முன்னதாக, 2026 ஒக்டோபர் 6ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஈரானியக் கப்பல்களுக்கு உணவு மற்றும் குடிநீர் விநியோகத்தைத் தடுப்பது தொடர்பாக அவர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மீண்டும் நவம்பர் 14ஆம் திகதி வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது வெளியிட்ட கருத்துக்கள் மற்றும் பாலஸ்தீனத்தைப் பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் நிகழ்வில் அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பாக முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் அரசியல் விவாதத்திற்கு உட்பட்டுள்ளன.

ஒரு சிரேஷ்ட அரசியல்வாதியாகவும், சிறுபான்மை சமூகமொன்றின் பிரதிநிதியாகவும் இருப்பவர் வெளிப்படுத்தும் கருத்துக்கள் சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை நிச்சயமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். பாராளுமன்றம் என்பது மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைப்பதற்கும், அரசாங்கத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கும், நாட்டின் கொள்கைகளை விவாதிப்பதற்குமான உயரிய ஜனநாயக அரங்கமாகும். அதற்காக வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமை, தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காகவோ சமூக உணர்வுகளைத் தூண்டுவதற்காகவோ பயன்படுத்தப்படக்கூடாது.

இவ்விடயத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்த விமர்சனமும் கவனத்திற்குரியது. அரசியலில் நீண்ட அனுபவமுள்ள ஒருவர் சிறு குழந்தையைப் போன்று கருத்துக்களை முன்வைக்கக் கூடாது என்றும், அரசியல் என்பது நகைச்சுவைக்கான களம் அல்ல என்றும் அவர் தெரிவித்த கருத்துக்கள் பாராளுமன்றப் பொறுப்புணர்வு குறித்த விவாதத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளன. அரசியல் விமர்சனங்கள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் அவை உண்மைகள், ஆதாரங்கள் மற்றும் பொறுப்பான மொழிநடையின் அடிப்படையில் அமைய வேண்டும்.

இலங்கையின் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டைப் பொறுத்தவரையில், ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்கு ஆதரவாக வாக்களித்த 151 நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. எனவே, பாலஸ்தீன மக்களின் உரிமைகள் தொடர்பில் அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாட்டை ஆராயாமல், உள்நாட்டு அரசியலுக்குச் சாதகமாகச் சர்வதேச விவகாரங்களைப் பயன்படுத்துவது நியாயமான அரசியல் அணுகுமுறையாகாது. 


அதேபோன்று, இலங்கையின் அணிசேராக் கொள்கை, தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பான தீர்மானங்கள் அனைத்தும் நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய நலன்களை அடிப்படையாகக் கொண்டே மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

இங்கு நாம் புரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான விடயம் என்னவென்றால், பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதற்கும் இலங்கையின் இன நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்கும் இடையில் எந்த முரண்பாடும் கிடையாது. ஒரு சர்வதேசப் பிரச்சினையில் மனிதாபிமான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதற்காக உள்நாட்டில் இன அல்லது மத அடிப்படையிலான அரசியல் முரண்பாடுகளை உருவாக்க வேண்டிய அவசியமும் இல்லை.

இலங்கையின் கடந்தகால அரசியல் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது, இன மற்றும் மத அடையாளங்களை முன்னிறுத்திய அரசியல் கட்சிகளின் வளர்ச்சியும், அவற்றைச் சுற்றியிருந்த அதிகாரப் போட்டிகளும் சமூகங்களுக்கிடையிலான இடைவெளிகளை அதிகரித்தமை மறுக்க முடியாத உண்மையாகும். 

குறிப்பாக, முஸ்லிம் அரசியலில் தனித்துவ அடையாளத்தை முன்னிறுத்திய கட்சிகள் உருவானதற்குப் பின்னால் அக்காலத்தில் நிலவிய சமூக மற்றும் அரசியல் சூழ்நிலைகள் இருந்தன. அவற்றின் ஆரம்பகால நோக்கங்கள் எவ்வாறாக இருந்தாலும், காலப்போக்கில் சமூகத்தின் உண்மையான பொருளாதார, கல்வி, தொழில்வாய்ப்பு மற்றும் அபிவிருத்திப் பிரச்சினைகளை விடுத்து, அடையாள அரசியலையும், தேர்தல் வெற்றிகளையும் மையப்படுத்திய அரசியல் கலாசாரம் வலுப்பெற்றதா என்பதை இன்று சுயவிமர்சனம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

ஒரு சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பது என்பது அந்தச் சமூகத்தை ஏனைய சமூகங்களிலிருந்து அரசியல் ரீதியாகப் பிரித்து வைத்திருப்பதல்ல. மாறாக, நாட்டின் ஒட்டுமொத்த அரசியல், பொருளாதார மற்றும் நிர்வாகக் கட்டமைப்பில் சமமான பங்காளிகளாக மாற்றுவதே உண்மையான உரிமைப் பாதுகாப்பாகும். முஸ்லிம்களாக இருந்தாலும், தமிழர்களாக இருந்தாலும், சிங்களவர்களாக இருந்தாலும் அனைவருக்கும் சமமான சட்டம், சமமான வாய்ப்பு, சமமான கௌரவம் கிடைக்க வேண்டும் என்பதே புதிய இலங்கையின் அடிப்படை எதிர்பார்ப்பாக இருக்க வேண்டும்.

அந்த வகையில், 2024ஆம் ஆண்டு மக்கள் வழங்கிய ஆணை இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து மக்கள் தேசிய மக்கள் சக்தியின் மீது நம்பிக்கை வைத்து 159 பாராளுமன்ற ஆசனங்களுடன் புதிய ஆட்சியை உருவாக்கினர். இந்த வெற்றியின் பின்னணியில் சிறுபான்மை மக்களின் பங்களிப்பும் முக்கியமானதாக இருந்தது. அது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கோ மதத்திற்கோ வழங்கப்பட்ட ஆணையல்ல; ஊழலற்ற நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி, சமத்துவம், சமூக நீதி மற்றும் புதிய அரசியல் கலாசாரத்திற்காக வழங்கப்பட்ட தேசிய ஆணையாகும்.

இன்று அந்த மாற்றத்தைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல; இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனதும் பொறுப்பாகும். குறிப்பாக, கடந்தகாலத்தில் இனவாத அரசியலால் பல்வேறு ஏமாற்றங்களையும் அச்சங்களையும் எதிர்கொண்ட சிறுபான்மை மக்களுக்கு, புதிய அரசியல் சூழலில் தமது எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வாய்ப்பை மீண்டும் பழைய அரசியல் தலைமைகளின் உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கும் தேர்தல் கால வாக்குறுதிகளுக்கும் பலியாக்கிவிடக்கூடாது.


அரசாங்கத்தின் மீது விமர்சனங்கள் இருந்தால் அவற்றை ஆதாரங்களுடன் முன்வைக்க வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, காணி, மத உரிமைகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் அவற்றை ஜனநாயக ரீதியில் அரசாங்கத்திடம் முன்வைத்து தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதுவே ஆக்கபூர்வமான அரசியல். அதற்குப் பதிலாக சர்வதேச மோதல்களைப் பயன்படுத்தி மக்களின் மத உணர்வுகளைத் தூண்டுவதும், அரசாங்கத்திற்கு எதிரான சந்தேகங்களை இன அடிப்படையில் உருவாக்குவதும் எந்தவொரு சமூகத்திற்கும் நீண்டகால நன்மையைத் தரப்போவதில்லை.

மேலும், வெளிநாட்டு நிதியுதவிகள், பல்வேறு அமைப்புகளின் அரசியல் நோக்கங்கள் மற்றும் நாட்டின் மாற்றத்தைத் திசைதிருப்பும் முயற்சிகள் தொடர்பாக எழுப்பப்படும் சந்தேகங்கள் இருந்தால் அவை உரிய ஆதாரங்களுடன் வெளிப்படையாக விசாரிக்கப்பட வேண்டும். ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை உண்மைகளாகப் பரப்புவதும், அரசியல் எதிர்ப்பைத் தேசவிரோதமாகச் சித்தரிப்பதும் தவிர்க்கப்பட வேண்டும்.

இன்றைய இலங்கைக்கு அவசியமானது இனவாதக் கோஷங்களோ, மதவாத அரசியல் மேடைகளோ அல்ல. பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் ஆற்றல், ஊழலை ஒழிக்கும் உறுதி, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நடைமுறை, இளைஞர்களுக்கான எதிர்காலம் மற்றும் அனைத்து மக்களும் கௌரவத்துடன் வாழக்கூடிய சமூகச் சூழலாகும்.

எனவே, பழைய அரசியல் கலாசாரத்தில் மக்களின் உணர்வுகளைப் பயன்படுத்தி அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட தலைமைகளின் அரசியல் அணுகுமுறைகளை இன்றைய இளைஞர்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் நடுநிலையான சிந்தனையாளர்கள் ஆழமாக ஆராய வேண்டும். அரசியல் தலைவர்களை விமர்சனமின்றிப் பின்பற்றுவது சமூகத்தின் எதிர்காலத்திற்குச் செய்யும் உதவியல்ல. உண்மையையும் பொய்யையும் பிரித்தறிந்து, சமூக ஒற்றுமையைப் பாதுகாக்கும் அரசியல் விழிப்புணர்வை உருவாக்குவதே காலத்தின் தேவை.

இலங்கையர் என்ற அடையாளமே எமது முதன்மையான அடையாளமாக இருக்க வேண்டும். முஸ்லிமாக இருப்பதும், தமிழராக இருப்பதும், சிங்களவராக இருப்பதும் எமது தனித்துவங்கள்; ஆனால் அவை ஒருபோதும் எம்மைப் பிரிப்பதற்கான ஆயுதங்களாக மாறக்கூடாது.

மீண்டும் இனவாத அரசியலுக்குள் நாட்டைத் தள்ளாமல், சமத்துவம், நல்லிணக்கம், சட்டத்தின் ஆட்சி மற்றும் சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்துவரும் மாற்றங்களை விமர்சன ரீதியாகக் கண்காணித்துக்கொண்டே, அவற்றின் நல்ல முன்னெடுப்புகளைப் பலப்படுத்துவதும், தேவையான சீர்திருத்தங்களுக்காகக் குரல் கொடுப்பதும் எமது ஜனநாயகக் கடமையாகும்.

அரசியல் தலைமைகள் மாறலாம்; அரசாங்கங்கள் மாறலாம்; ஆனால் இன நல்லிணக்கமும் தேசிய ஒற்றுமையும் ஒருபோதும் சிதைக்கப்படக்கூடாது. பழைய அரசியல் கலாசாரத்திற்கு மீண்டும் இடமளிக்காமல், வளமான நாடு, அழகான வாழ்க்கை என்ற இலக்கை நோக்கி இலங்கையர்களாகக் கைகோர்த்து முன்னேறுவோம்!

அஹமட் இர்ஷாட்.
இன்றைய தினகரன் பத்திரிகைக்காக,
17-11-2026.

පාර්ලිමේන්තු වරප්‍රසාද? නැතිනම් ආත්මාර්ථකාමී දේශපාලනයේ වේදිකාවක්ද?

ජාත්‍යන්තර කටයුතු දේශීය දේශපාලනය සඳහා යොදා ගැනීම සහ ආගමික හැඟීම් අවුළුවාලීම සාධාරණ දේශපාලන ප්‍රවේශයක් නොවේ.

ජාතිවාදය සහ ආගම්වාදය යළි පණ ගැන්වීමේ උත්සාහයන් ව්‍යර්ථ කිරීම පමණක් නොව, නව දේශපාලන සංස්කෘතියක් ආරක්ෂා කර ගැනීම ද කාගේත් වගකීමකි!

සුළුතර ප්‍රජාවන්ගේ අයිතීන් සුරැකිය යුත්තේ අනන්‍යතා දේශපාලනයෙන් නොව රටේ සමාන අවස්ථා සහ නීතියේ ආධිපත්‍යය හරහාය.
++++++++++++++++++

රටක දේශපාලන වෙනසක් බලයට පත් වූවන් ආදේශ කිරීමෙන් පමණක් අවසන් නොවේ. ඒ වෙනුවට රටේ දේශපාලන චින්තනයේ, සමාජ ආකල්පවල, අන්තර් ජාතික සබඳතාවල සහ අනාගතය පිළිබඳ ජනතාවගේ බලාපොරොත්තුවල ද පරිවර්තනයක් ඇති විය යුතුය. දශක ගණනාවක් ජාතිවාදය, ආගම්වාදය, සමාජ බෙදීම්, බල අරගල තුළ සිරවී සිටි ශ්‍රී ලංකාව 2024 දී ජනතාව ලබාදුන් ඓතිහාසික ජනවරම හරහා නව දේශපාලන මාවතක ගමන් කිරීමට පටන් ගෙන තිබේ.

අනුර කුමාර දිසානායක ජනාධිපතිවරයාගේ නායකත්වයෙන් යුත් ජාතික ජන බලවේගය රජය විසින් ගෙන යන මෙම වෙනස ශක්තිමත් කරනු වෙනුවට යළිත් වරක් රට පැරණි දේශපාලන සංස්කෘතියට ඇද දැමීමට උත්සාහ කරන ඇතැම් දේශපාලන නායකයින්ගේ මෑතකාලීන ක්‍රියා කලාපය අවධානයට ලක්විය යුතු කරුණක් බවට පත්ව තිබේ.

විශේෂයෙන්ම සුළුතර ප්‍රජාවන්ගේ හැඟීම් දේශපාලන ප්‍රාග්ධනය ලෙස යොදා ගනිමින් බහුතර සහ සුළු ජන කොටස් අතර සැකය හා ගැටුම් ඇති කරන දේශපාලන ප්‍රවේශයන් යළි හිස ඔසවන්නට පටන් ගෙන තිබේ. ශ්‍රී ලංකා මුස්ලිම් කොංග්‍රසයේ නායක රවුෆ් හකීම් මහතා පාර්ලිමේන්තුවේදී කළ ප්‍රකාශය සහ ඉන් පසුව ඇති වූ දේශපාලන වාද විවාදවලින් මෙයට මෑතකාලීන උදාහරණයක් දැක්විය හැකිය.

පලස්තීන ජනතාවගේ දුක් වේදනා සහ මැදපෙරදිග පවතින මානුෂීය අර්බුද ඉස්මතු කරමින් රජයේ විදේශ ප්‍රතිපත්තිය විවේචනය කිරීමට ඕනෑම මන්ත්‍රීවරයෙකුට ප්‍රජාතන්ත්‍රවාදී අයිතියක් ඇත. පලස්තීන ජනතාවගේ මූලික අයිතිවාසිකම් සුරැකීමට සහය දැක්වීම සඳහා මානුෂීය හේතූන් මත සියලුම ශ්‍රී ලාංකිකයින් එකමුතු විය යුතුය. නමුත් මෙහිදී මතුවන වැදගත් ප්‍රශ්නය වන්නේ එම ජාත්‍යන්තර ප්‍රශ්න දේශීය ජනවාර්ගික දේශපාලනය සමඟ සම්බන්ධ කර රජය යම් ආගමකට හෝ ප්‍රජාවකට එරෙහිව ක්‍රියා කරන බවට මතයක් ඇති වන ආකාරයෙන් අදහස් ඉදිරිපත් කිරීම වගකිවයුතු දේශපාලනයද යන්නයි.

විශේෂයෙන්ම අනුර කුමාර දිසානායක ජනාධිපතිවරයා ප්‍රමුඛ රජය ඊශ්‍රායලයට සහය පළ කරමින් ඉරානයට එරෙහි ස්ථාවරයක ක්‍රියා කරන බවට රාවුෆ් හකීම් මහතා ඉදිරිපත් කරන විවේචනය දේශපාලන ප්‍රශ්න කිහිපයක් මතු කර තිබේ. මීට පෙර, 2026 ඔක්තෝම්බර් 6 වන දින ඉරාන නැව්වලට ආහාර සහ පානීය ජල සැපයුම අවහිර කිරීමට ඔහු පාර්ලිමේන්තුවේදී විරුද්ධත්වය ප්‍රකාශ කර තිබුණි.

මේ තත්ත්වය යටතේ නොවැම්බර් 14 වැනිදා අයවැය විවාදයේදී ඔහු යළිත් කළ ප්‍රකාශය මෙන්ම පලස්තීනය සුරැකීමේ ජාතික ව්‍යාපාරයේ උත්සවයකදී රජයේ විදේශ ප්‍රතිපත්තිය සම්බන්ධයෙන් ඔහු නැගූ චෝදනාද දේශපාලන අවධානයට ලක්ව තිබේ.

ජ්‍යෙෂ්ඨ දේශපාලනඥයකු සහ සුළුතර ප්‍රජාවක නියෝජිතයකු ප්‍රකාශ කරන අදහස් සමාජයට ඇති කළ හැකි බලපෑම නිසැකවම සැලකිල්ලට ගත යුතුය. පාර්ලිමේන්තුව යනු ජනතාවගේ ප්‍රශ්න මතු කිරීමටත්, රජයේ වැරදි පෙන්වා දීමටත්, රටේ ප්‍රතිපත්ති ගැන විවාද කිරීමටත් ඇති උත්තරීතර ප්‍රජාතන්ත්‍රවාදී වේදිකාවයි. ඒ සඳහා ලබා දී ඇති වරප්‍රසාද පුද්ගලික දේශපාලන අරමුණු සඳහා හෝ ජාතිවාදී හැඟීම් අවුළුවාලීම සඳහා භාවිත නොකළ යුතුය.

මේ සම්බන්ධයෙන් බිමල් රත්නායක අමාත්‍යවරයා කළ විවේචනය ද විශේෂත්වයකි. දේශපාලනයේ දීර්ඝ කාලීන අත්දැකීම් ඇති අයෙකු කුඩා දරුවෙකු මෙන් ප්‍රකාශ නොකළ යුතු බවටත්, දේශපාලනය විහිළු තහළු කරන ක්ෂේත්‍රයක් නොවන බවටත් ඔහු කළ ප්‍රකාශය පාර්ලිමේන්තු වගවීම පිළිබඳ සංවාදය තවත් ශක්තිමත් කර තිබේ. දේශපාලන විවේචන කෙසේ වෙතත්, එය පදනම් විය යුත්තේ කරුණු, සාක්ෂි සහ වගකිවයුතු භාෂාව මතය.

ශ්‍රී ලංකාවේ පලස්තීන ගැති ස්ථාවරය සම්බන්ධයෙන්, එක්සත් ජාතීන්ගේ සංවිධානයේදී පලස්තීන ජනතාවගේ අයිතිවාසිකම් වෙනුවෙන් ඡන්දය දුන් රටවල් 151 අතර ශ්‍රී ලංකාව ද විය. එබැවින් පලස්තීන ජනතාවගේ අයිතීන් සම්බන්ධයෙන් ආණ්ඩුවේ සැබෑ ස්ථාවරය පරීක්ෂා නොකර ජාත්‍යන්තර ප්‍රශ්න දේශීය දේශපාලනයට ගැළපෙන ලෙස යොදා ගැනීම සාධාරණ දේශපාලන ප්‍රවේශයක් නොවේ.

එසේම, ශ්‍රී ලංකාවේ නොබැඳි ප්‍රතිපත්තිය, ජාතික ආරක්‍ෂාව සහ විදේශ ප්‍රතිපත්තිය සම්බන්ධ සියලු තීරණ තක්සේරු කළ යුත්තේ රටේ ස්වෛරීභාවය සහ ජාතික අවශ්‍යතා මත ය.

මෙහිදී අප තේරුම් ගත යුතු කරුණ වන්නේ පලස්තීන ජනතාවගේ අයිතීන් වෙනුවෙන් හඬ නැගීම සහ ශ්‍රී ලංකාවේ වාර්ගික සහජීවනය ආරක්ෂා කිරීම අතර කිසිදු පරස්පරතාවයක් නොමැති බවයි. ජාත්‍යන්තර ප්‍රශ්නයක් සම්බන්ධයෙන් මානුෂීය ස්ථාවරයක් ගැනීම සඳහා රට තුළ වාර්ගික හෝ ආගමික දේශපාලන ගැටුම් ඇති කිරීමේ අවශ්‍යතාවක් ද නැත.

ශ්‍රී ලංකාවේ දේශපාලන ඉතිහාසය දෙස ආපසු හැරී බලන විට, වාර්ගික හා ආගමික අනන්‍යතා පෙරටු කරගත් දේශපාලන පක්ෂවල වර්ධනය සහ ඒවා වටා ඇති බල අරගල, ප්‍රජාවන් අතර බෙදීම් වැඩි කිරීමට හේතු වූ බව ප්‍රතික්ෂේප කළ නොහැකි සත්‍යයකි.

විශේෂයෙන්ම මුස්ලිම් දේශපාලනයේ සුවිශේෂී අනන්‍යතාවක් අවධාරණය කරන පක්ෂ බිහිවීම එකල පැවති සමාජ හා දේශපාලන තත්ත්වයන් අනුව හැඩගැසුණි. ඔවුන්ගේ මූලික අරමුණු කුමක් වුව, ප්‍රජාවගේ සැබෑ ආර්ථික, අධ්‍යාපනික, රැකියා සහ සංවර්ධන ප්‍රශ්න නොසලකා හරින අතරේ, කාලයාගේ ඇවෑමෙන් අනන්‍යතා දේශපාලනය සහ මැතිවරණ ජයග්‍රහණ කේන්ද්‍ර කරගත් දේශපාලන සංස්කෘතියක් ශක්තිමත් වූයේද යන්න පිළිබඳව ස්වයං විවේචනයක අවශ්‍යතාවය දැන් පවතී.

ප්‍රජාවක අයිතීන් සුරැකීම යනු එම ප්‍රජාව වෙනත් ජනකොටස්වලින් දේශපාලනිකව හුදකලා කිරීම නොවේ. ඒ වෙනුවට, අයිතිවාසිකම්වල සැබෑ ආරක්ෂාව පවතින්නේ ඔවුන් රටේ සමස්ත දේශපාලන, ආර්ථික සහ පරිපාලන ව්‍යුහයේ සමාන හවුල්කරුවන් බවට පත්කිරීම තුළය. ඔවුන් මුස්ලිම් වේවා, දෙමළ වේවා, සිංහල වේවා, සැමට සමාන නීතියක්, සමාන අවස්ථා සහ සමාන ගෞරවයක් ලැබිය යුතුය. මෙය නව ශ්‍රී ලංකාවේ මූලික අපේක්ෂාව විය යුතුය.

ඒ අර්ථයෙන් ගත් කල, 2024 දී ජනතාව ලබා දුන් ජනවරම ශ්‍රී ලංකාවේ දේශපාලන ඉතිහාසයේ සුවිශේෂී සන්ධිස්ථානයක් බවට පත් විය. වාර්ගික, ආගමික සහ භාෂාමය භේදයන් තරණය කරමින් ජනතාව ජාතික ජන බලය කෙරෙහි විශ්වාසය තබා පාර්ලිමේන්තු ආසන 159කින් යුත් නව රජයක් පිහිටුවා ගත්හ. මෙම ජයග්‍රහණය පිටුපස සුළු ජාතික ප්‍රජාවන්ගේ දායකත්වයද වැදගත් විය. එය කිසියම් ජනවර්ගයකට හෝ ආගමකට ලබා දුන් වරමක් නොවේ; එය දූෂණයෙන් තොර පාලනයක්, නීතියේ ආධිපත්‍යය, සමානාත්මතාවය, සමාජ සාධාරණත්වය සහ නව දේශපාලන සංස්කෘතියක් සඳහා ලබා දුන් ජාතික වරමකි.

අද ඒ වෙනස ආරක්ෂා කිරීම රජයේ වගකීමක් පමණක් නොවේ; එය මේ රටේ සෑම පුරවැසියෙකුගේම වගකීමකි. විශේෂයෙන්ම පසුගිය කාලයේ ජාතිවාදී දේශපාලනය නිසා විවිධ බලාපොරොත්තු සුන්වීම් සහ භීතීන්ට මුහුණ දුන් සුළු ජාතික ප්‍රජාවන්ට තම අනාගතය තීරණය කිරීමට නව දේශපාලන පරිසරය තුළ දැන් අවස්ථාවක් උදාවී තිබේ. එම අවස්ථාව නැවත වරක් පැරණි දේශපාලන නායකත්වයන්ගේ හැඟීම්බර වාචාල කතාවලට සහ මැතිවරණ කාලයේ පොරොන්දුවලට බිල්ලට නොදිය යුතුය.

ආණ්ඩුවට විවේචන තිබෙනවා නම් ඒවා සාක්ෂි සහිතව මතු කළ යුතුයි. මුස්ලිම් ප්‍රජාවගේ අධ්‍යාපනය, ආර්ථිකය, රැකියා, ඉඩම්, ආගමික අයිතිවාසිකම් සහ ප්‍රාදේශීය සංවර්ධනය සම්බන්ධ ගැටලු තිබේ නම් ඒවා ප්‍රජාතන්ත්‍රවාදීව රජයට ඉදිරිපත් කර විසඳුම් ලබා ගත යුතුයි. ඒක තමයි නිර්මාණාත්මක දේශපාලනය. ඒ වෙනුවට ජාත්‍යන්තර ගැටුම් ගසාකමින් මිනිසුන්ගේ ආගමික හැඟීම් ඇවිස්සීම සහ රජයට එරෙහිව වාර්ගික පාදක සැක සංකා ඇති කිරීම කිසිඳු ප්‍රජාවකට දිගුකාලීන ප්‍රතිලාභයක් ගෙන දෙන්නේ නැත.

තවද විදේශ අරමුදල්, විවිධ සංවිධානවල දේශපාලන න්‍යාය පත්‍ර, රටේ පරිවර්තනය වෙනතකට යොමු කිරීමට දරන උත්සාහයන් පිළිබඳව යම් සැකයක් මතුවන්නේ නම් ඒවා නිසි සාක්ෂි සහිතව විවෘතව විමර්ශනය කළ යුතුය. පදනම් විරහිත චෝදනා කරුණු ලෙස පතුරුවා හැරීම සහ දේශපාලන විරුද්ධත්වය ජාතික විරෝධී ලෙස හුවා දැක්වීම වැළැක්විය යුතුය.

අද ශ්‍රී ලංකාවට අවශ්‍යව ඇත්තේ වාර්ගික ස්වෝත්තමවාදී සටන් පාඨ හෝ ආගම් වශයෙන් භේද ඇති කරන දේශපාලන වේදිකාවන් නොවේ. ආර්ථිකය නඟා සිටුවීමේ හැකියාව, දූෂණය පිටුදැකීමේ අධිෂ්ඨානය, සැමට නීතිය ඉදිරියේ සමානාත්මතාවයේ පිළිවෙතක්, තරුණ තරුණියන්ට අනාගතයක්, සියලු මිනිසුන්ට අභිමානයෙන් ජීවත් විය හැකි සමාජ පරිසරයක් අවශ්‍යයි.

එබැවින් පැරණි දේශපාලන සංස්කෘතිය තුළ ජනතා හැඟීම් ගසාකමින් බලය ලබා ගත් නායකයින්ගේ දේශපාලන ප්‍රවේශයන් වර්තමාන තරුණයින්, බුද්ධිමතුන්, සමාජ ක්‍රියාකාරීන් සහ අපක්ෂපාතී චින්තකයින් විසින් ගැඹුරින් විමසා බැලිය යුතුය. දේශපාලන නායකයන් අන්ධ ලෙස අනුගමනය කිරීම සමාජයේ අනාගතයට කරන දායකත්වයක් නොවේ. සත්‍යය අසත්‍යයෙන් වෙන්කර හඳුනාගෙන සමාජ සංහිඳියාව ආරක්ෂා කරන දේශපාලන දැනුවත්භාවය වර්ධනය කිරීම යුගයේ අවශ්‍යතාවයයි.

ශ්‍රී ලාංකික යන අනන්‍යතාවය අපගේ මූලික අනන්‍යතාවය විය යුතුය. මුස්ලිම් වීමත්, දෙමළ වීමත්, සිංහල වීමත් අපගේ අනන්‍යතාවයයි. කෙසේ වෙතත්, ඒවා කිසි විටෙකත් අපව බෙදීමට භාවිතා කරන ආයුධ බවට පත් නොවිය යුතුය.

නැවත වරක් රට ජාතිවාදී දේශපාලනයකට තල්ලු නොකර සමානාත්මතාවය, සංහිඳියාව, නීතියේ ආධිපත්‍යය සහ සමාජ සාධාරණත්වය මත පදනම් වූ නව ශ්‍රී ලංකාවක් ගොඩනැගීමට අප සැවොම එක්විය යුතුය. ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතාගේ නායකත්වයෙන් යුත් ජාතික ජන බලවේගය රජය විසින් ඉදිරියට ගෙන යන වෙනස්කම් විවේචනාත්මකව නිරීක්ෂණය කරන අතරම, එහි ධනාත්මක මුලපිරීම් ශක්තිමත් කිරීම සහ අවශ්‍ය ප්‍රතිසංස්කරණ වෙනුවෙන් හඬ නැගීම අපගේ ප්‍රජාතන්ත්‍රවාදී යුතුකමයි.

දේශපාලන නායකත්වය වෙනස් විය හැකිය; ආණ්ඩු වෙනස් විය හැක; එහෙත් ජනවාර්ගික සංහිඳියාව සහ ජාතික සමගිය කිසිවිටෙක පළුදු නොවිය යුතුය. පැරණි දේශපාලන සංස්කෘතියට නැවත පැමිණීමට ඉඩ නොතබමින්, සමෘද්ධිමත් දේශයක් සහ සුන්දර ජීවිතයක් යන ඉලක්කය කරා ශ්‍රී ලාංකිකයන් ලෙස එක්ව ඉදිරියට යමු!

අහමඩ් ඉර්ෂාඩ්.
අද දිනකරන් පුවත්පත සඳහා,
17-11-2026.
பாராளுமன்ற சிறப்புரிமையா? சுயநல அரசியல் மேடையா? Reviewed by www.lankanvoice.lk on நவம்பர் 18, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.