9 தமிழ் எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு: ஐவர் சஜித் பக்கம்!
9 பேர் ரணிலுக்கு ஆதரவு: ஐவர் சஜித் பக்கம்
எழுவர் இன்னும் முடிவு இல்லை
தற்போதைய நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 28 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 9 பேர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு நேசக்கரம் நீட்டுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கும் முயற்சிக்கு ஐந்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் ஏழு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாருக்கு ஆதரவு என்பது பற்றி தமது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் இரு எம்.பிக்களும், ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதற்கு அறைகூவல் விடுத்துள்ளனர்.
2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மக்களின் அங்கீகாரத்துடன் 25 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிஉயர் சபைக்கு தெரிவாகினர். தேசியப்பட்டியல் ஊடாகவும் மூவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது
இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் கலையரசனும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் செல்வராசா கஜேந்திரனும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் சுரேன் ராகவனும் தேசியப்பட்டியல் ஊடாக சபைக்கு வந்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த புளொட், ரெலோ என்பன தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்தில் தேர்தலில் களம் கண்டன. ரெலோவுக்கு மூன்று ஆசனங்களும், புளொட்டுக்கு ஒரு ஆசனமும் கிடைக்கப்பெற்றது.
இதில் புளொட் மற்றும் ரெலோ என்பன (4 எம்.பிக்கள்) தமிழ் பொதுவேட்பாளர் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. எனினும், ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பதென தமிழரசுக் கட்சி (6 எம்.பிக்கள்) இன்னும் முடிவெடுக்கவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் தெரிவான அங்கஜன் ராமநாதனும் தமது நிலைப்பாட்டை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. சஜித் யாழ்ப்பாணம் சென்றபோது அவருடனும் இருந்தார், ஜனாதிபதி யாழ். சென்றபோதும் அவருடன் இணைந்தும் வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1. டக்ளஸ் தேவானந்தா (ஈபிடிபி)
2. குலசிங்கம் திலீபன் (ஈபிடிபி)
3. ஜீவன் தொண்டமான் (இதொகா)
4. மருதபாண்டி ராமேஷ்வரன் (இதொகா)
5. வடிவேல் சுரேஷ் ( ஐக்கிய மக்கள் சக்தி)
6. அரவிந்தகுமார் ( ஐக்கிய மக்கள் சக்தி)
7. பிள்ளையான் (தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்)
8. எஸ். வியாழேந்திரன் (தமிழர் முற்போக்கு கழகம்)
9. சுரேன் ராகவன் (தேசிய பட்டியல்)
1. மனோ கணேசன் (TPA)
2. வேலுசாமி ராதாகிருஷ்ணன்
3. பழனி திகாம்பரம்
4. எம். வேலுகுமார்
5. எம். உதயகுமார்
1. சிவி விக்னேஸ்வரன் (தமிழ் மக்கள் தேசிய கூட்டணி)
2. செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ)
3. வினோநோதராதலிங்கம் (ரெலோ)
4. கோவிந்தன் கருணாகரம் (ரெலோ)
5. தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட்)
1. எஸ்.சிறிதரன் (தமிழரசு)
2. எம்.ஏ.சுமந்திரன் (தமிழரசு)
3. சார்ள்ஸ் நிர்மலநாதன் (தமிழரசு)
4. ஆர். சாணக்கியன் (தமிழரசு)
5. எஸ். குகதாசன் (தமிழரசு)
6. தவராஜா கலையரசன் ( தமிழரசு)
7. அங்கஜன் ராமநாதன் (சு.க.)
1. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (த.தே.ம.முன்னணி)
2. செல்வராசா கஜேந்திரன் ; (த.தே.ம.முன்னணி)
ஆர். சனத்

கருத்துகள் இல்லை: